செங்கல்பட்டு : 500-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு 500-க்கு கீழ் குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 456-ஆக பதிவாகியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தன. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.
ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனை எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 456 , கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 13, குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 787. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 3169 .
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு குணமடைந்து வீடு திரும்புபவர்களின் தற்போது படுக்கைகள் காலியாக உள்ளன. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152722 ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொடர் கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுகைகள் காலியாக உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய நலன் மற்றும் அனைவரின் நலன் கருதி முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு கூறும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.