மேலும் அறிய

India Corona Spike: மே மாதம் 50,000 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கும்.. ஐஐடி கணிப்பு..

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐஐடி கான்பூர் பேராசிரியர் டாக்டர் மனிந்திர அகர்வால், மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என கணித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐஐடி கான்பூர் பேராசிரியர் டாக்டர் மணிந்திர அகர்வால், மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என கணித்துள்ளார். கணித மாதிரியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் மே மாதத்தில் கிட்டத்தட்ட 50,000 முதல் 60,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,109 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை 7,830 என பதிவான தினசரி தொற்று பாதிப்பு, நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,622 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்புல் 0.11 சதவீதம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்க இரண்டு காரணங்கள் உண்டு என ஐஐடி-கான்பூர் பேராசிரியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 5% மக்களிடையே குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் பரவி வரும் xbb 1.16 மற்றும் ba2 வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது, இந்த இரண்டு காரணங்களால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  

90% மக்களிடையே கொரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.  "இந்த மாதிரியின்படி வரவிருக்கும் மாதங்களில் 50,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு இது பெரிய விஷயமல்ல" என்றும் டாக்டர் மணீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் அறிகுறிகள் தீவிரமாக இல்லாமல் லேசானதாக இருக்கிறது. பெரும்பாலானோருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது, இதற்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா வைரஸால் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளார்.

 மேலும் ஐ.சி.எம்.ஆர் தரப்பில் சிகிச்சை வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்தால் அதாவது லேசான காய்ச்சல் இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு ஆண்டிபயாடிக் பயன்படுத்தக்கூடாது. மூச்சுத்திணறல், சுவாச நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்படவேண்டும். தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட உடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு 30 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget