India Corona Spike: அச்சுறுத்தும் கொரோனா.. விதிமுறைகளில் திருத்தம் செய்த மத்திய சுகாதார அமைச்சகம்..
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3,000 கடந்து பதிவாகும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா சிகிச்சை விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேர்த்தில் 3,641 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் படி நேற்று மட்டும் 3,824 பேருக்கும் சனிக்கிழமையன்று 3,095 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,75,135 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவாகியுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் அடிப்படையில் இதுவரை 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதர துறை தரப்பில் கொரோனா சிகிச்சைக்கான வழிகாட்டிகளை திருத்தி வெளியிட்டுள்ளது. பாக்டீரியா நோய்த்தொற்று இல்லாத நபர்களுக்கு ஆண்டி பாக்டீரியாவை பயன்படுத்தக்கூடாது. பிற நோய்த்தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். சிஸ்டமிக் கார்டிகோஸ்டீராய்டுகள் என்ற மருந்தை லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு பயன்படுத்த கூடாது என அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் மூச்சுத்திணறல், அதிகபடியான காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார மையம் தரப்பில் தடுப்பூசி போடும் விதிமுறைகளை திருத்து கடந்த வாரம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
முதல் பிரிவினர் ( high priority group): வயதானவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பின் 6-12 மாதத்திற்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் பிரிவினர் (medium priority group): இணை நோய் இல்லாத இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய் இருக்கும் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் என்றும் இந்த பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் பிரிவினர் ( low priority group): 6 வயது முதல் 17 வயது வரை இருப்பவர்கள் மூன்றாம் பிரிவினராக கருதப்படுகின்றனர். இந்த பிரிவினருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றும் தேவைப்பட்டால் செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி என்பது அனைத்து வயதினருக்கும் உகந்தது என உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )