5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - கரூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் வாஷில் மெஷின் பரிசு...!
’’கரூர் மாவட்டத்தில் இதுவரை 55% பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன’’
கரூர் மாவட்டத்தில் வருகின்ற 10.10.2021 தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட நிர்வாகத்தின் 5ஆவது தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டு கொள்ள பொது மக்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு யுக்திகளை செய்து வரும் நிலையில் தற்போது புதிதாக மாற்றி நிர்வாகத்தின் சார்பாக தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் குலுக்கல் முறைகள் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கரூர் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிறு அன்று தடுப்பூசி போட்டு கொள்ளும் பொது மக்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மெஷின், இரண்டாவது பரிசாக கிரைண்டர், மூன்றாவது பரிசாக மிக்ஸி, நான்காவது பரிசாக 25 நபர்களுக்கு தலா ஒரு குக்கர், ஐந்தாவது பரிசாக 100 நபர்களுக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அதற்கான விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசிகள் 55 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை கடந்த சிறப்பு முகாமில் தகவல் தெரிவித்திருந்தனர். அதன்படி வருகின்ற 5 ஆவது தடுப்பூசி முகாம் மிகப்பெரிய அளவில் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இருந்த போதிலும் தடுப்பு சிறப்பு முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் குறைவதால் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
காலை முதல் மதியம் வரை தடுப்பு முகாமில் தடுப்பூசி போடுவதுடன், மாலை பொது மக்கள் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனினும், தடுப்பூசி போட்டு கொள்ள கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த அக்கறை இல்லாமல் இருப்பதால் அவற்றை ஊக்குவிக்கும் விதமாக தற்போது மாவட்ட நிர்வாகம் புதுவிதமாக யோசனையில் இறங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி பம்பர் பரிசு வெல்லப்போவது யார்? தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் வருவார்களா என அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் முதல் தடுப்பூசி மெகா முகாமில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு 50 ஆயிரம் இணைக்கப்பட்ட நிலையில் 10,000 தடுப்பூசிகள் அதிகமாக போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது மிக தடுப்பூசி முகாமில் மாவட்ட மக்கள் நலன் கருதி மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆலோசனைக் இணைந்து 624 இடங்களில் ஒரு லட்சம் தடுப்பூசி போட முடிவு செய்து அதற்கான விளம்பரமும் செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஒரு லட்சம் தடுப்பூசி இலக்கை அப்போது மாவட்ட நிர்வாகம் வெற்றிகரமாக ஒரு லட்சத்து 37 நபர்களுக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது. அதை தொடர்ந்து, மூன்றாவது வாரம் தடுப்பூசி முகாம் 524 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டது.
ஆனால், நான்காவது வார தடுப்பு முகாமில் எதிர்பார்த்த அளவிற்கு பொதுமக்கள் வராததால் 17,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. அப்போது கூட மாவட்ட நிர்வாகம் குலுக்கலில் பரிசு விழும் என அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 5ஆவது வாரம் தடுப்பூசி முகாமை ஊக்குவிக்கும் விதமாக பம்பர் பரிசுகளை மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )