Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் இன்று 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 69 பேர் உயிரிழப்பு..!
கொரோனாவால் மேலும் 69 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 39 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,51,631 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,039 ஆக உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 13 ஆயிரத்து 098 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 098 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 180 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 180-ஆக உள்ளது.
கோவை 349, ஈரோடு 230, சேலம் 191, திருப்பூர் 176, தஞ்சாவூர் 179, செங்கல்பட்டு 156, நாமக்கல் 95, திருச்சி 121, திருவள்ளூர் 90, கடலூர் 98, திருவண்ணாமலை 115, கிருஷ்ணகிரி 57, கள்ளக்குறிச்சி 80, தருமபுரி 72, கன்னியாகுமரி 50, மதுரை 45, விழுப்புரம் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 69 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 51 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8252 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,411 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,46,552 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
COVID19 | Tamil Nadu records 3,039 new cases, 3,411 recoveries and 69 deaths today; the number of active cases in the state is 33,224 pic.twitter.com/dYA8RtKWv1
— ANI (@ANI) July 9, 2021
12 வயதிற்குட்பட்ட 135 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40,457 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,889 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7035 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )