‛5 சதவிகித நீரிழிவு நோயாளிகளால் முற்றிலும் குணமடையலாம்’ டாக்டர்கள் சொல்வது சாத்தியமா?
டைப் 2 நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியான செய்தியை கூறுகின்றனர்.
பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் .இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படும் இந்த வகை நோய், இந்தியாவில் சுமார் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. நாட்டில் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் நீரிழிவு தலைநகரமாக இந்தியா கருதப்படுகிறது. நீரிழிவு என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது ஆகியவை நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம். எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் மேலாண்மை தேவைப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கருத்துப்படி, நீங்கள் முன்கூட்டியே நீரிழிவு நோயாளியாக இருந்தால், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் வகை 2 நீரிழிவு நோயை தாமதப்படுத்த உதவும் என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த டைப் 2 நீரிழிவு நோயை முழுமையாக குணமாக்கும் வழுமுறைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் இருக்கும் திசுக்களுக்கு தேவையான சக்தி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மூலம் பெறப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பு மற்றும் கிளைகோஜென்னாகவும் சேமித்து வைக்க கணையத்தில் இருந்து உற்பத்தியாகும் இன்சுலின் உதவுகிறது.
உட்கொள்ளும் உணவின் அளவுக்கு ஏற்றவாறு தானாகவே சுரக்கும் இன்சுலின் இந்த வேலையை செய்கிறது. ஆனால் சில காரணங்களால் இன்சுலினின் சுரக்கும் அளவு குறையும் போது, சாப்பிடும் உணவில் இருக்கும் சர்க்கரையானது திசுக்களுக்கு ஆற்றல் தரக்கூடிய சக்தியாக மாற்றப்படாமல் நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து ஒரு கட்டத்தில் சிறுநீரிலும் கூட சர்க்கரை வெளியாகிறது. இது நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்று குறிப்பிடப்படுகிறது. அதிக எடை, அதிக கொழுப்பு, இதய கோளாறுகள், ரத்த கொதிப்பு, மரபணு வழி, போதுமான உடல் உழைப்பு அல்லது, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, கவலை மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நோய் நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை நீரிழிவு (Type 1 diabetes), இரண்டாம் வகை நீரழிவு (Type 2 diabetes). இதில் டைப் 1 அரிதாக வர கூடியது தடுக்க முடியாதது. டைப் 2 தான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது. இரண்டாம் வகை நீரிழிவு அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு வளர்சிதை மாற்ற கோளாறு. ஹைப்பர் கிளைசெமிக் என்றும் அழைக்கப்படும் இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படும் இந்த வகை நோய், இந்தியாவில் சுமார் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. அனைவரையும் அசுச்சுறுத்தும் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள் முற்றிலுமாக குணப்படுத்துவதற்கும் ஒரு நிலையில் மேலாண்மை செய்வதற்குமான வித்தியாசத்தை கூறுகின்றனர்.
இதன் மூலம் வாழ்நாள் முழுக்க பிடித்த உணவை சாப்பிட முடியாமல் கஷ்டப்பட வேண்டியதில்லை. அதற்கான வழியாக மருத்துவர்கள் கூறுவது, வாழ்க்கை முறை மாற்றம். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த சீரான டயட்டும் உதவுகிறது. இதற்காக சமூக வலைத்தளங்களில் நிறைய விழிப்புணர்வுகலும் நடத்தப் படுகின்றன. ஃபே ரிலே, Ph.D., நீரிழிவு அளித்த பேட்டியில், "ஆராய்ச்சி சோதனைகளுக்கு வெளியே நீரிழிவு நோயைக் குறைத்தவர்களை அடையாளம் காண்பது அவர்களுக்குத் தேவையான தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்வதில் முக்கியமானது. இந்த கண்டுபிடிப்புகள் பொது மக்களில் யாருக்கு சிறந்த நிவாரண வாய்ப்பு உள்ளது என்பதற்கான நுண்ணறிவை வழங்க முடியும், மேலும் பயனடையக்கூடியவர்களுடன் முக்கிய உரையாடல்களைத் தொடங்க சுகாதார நிபுணர்களுக்கு உதவுகிறது." என்று கூறியிருக்கிறார். அதிலெல்லாம் சிறந்தது வரும் முன் காப்பது என்று ஆராய்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். சத்தான உணவுகள் கொண்டு உடல் நலத்தை நன்றாக பேணி வந்தால் நீரிழிவு நோய் வராது என்று கூறுகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )