மேலும் அறிய

அளவுக்கு அதிகமாக உணவில் தக்காளி சேர்க்கிறீங்களா? இந்த பக்க விளைவுகளும் வரலாம் கவனம்..

தக்காளி பழவகையாக இருந்தாலும் நாம் காய்கறி வகையாக தான் பயன்படுத்துகிறோம். சட்னி, குழம்பு, சாஸ், சாதம் என வளைத்து வளைத்து எல்லாவற்றிலும் தக்காளி பயன்படுத்துகிறோம்.

தக்காளி பழவகையாக இருந்தாலும் நாம் காய்கறி வகையாக தான் பயன்படுத்துகிறோம். சட்னி, குழம்பு, சாஸ், சாதம் என வளைத்து வளைத்து எல்லாவற்றிலும் தக்காளி பயன்படுத்துகிறோம். ஆனால் தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். அதிகமாக தக்காளி சாப்பிட்டால் கிட்னியின் செயல்பாடுகளை குறைத்துவிடும்.

அசிடிட்டி பிரச்சனை:

தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. தக்காளி உங்கள் உடலில் பல அமில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும்.  

கற்கள் ஜாக்கிரதை:

தக்காளியில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ள இந்த பழம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது. ஆனால் இதற்கு எதிர்மறையாக இந்த சத்துக்களை உறிஞ்சுவதும், அவற்றை வெளியேற்றுவதும் மிகவும் கடினமான ஒன்று. இது நம் உடலில் அதிகம் சேர்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும், இது மிகவும் ஆபத்தான ஒன்று.

வயிற்றுவலி:

தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள் உங்கள் வயிற்றின் செயல்பாடு மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை குடலில் ஒட்டிக்கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் குடல் இயக்கங்களை பாதிக்கும் முக்கிய உணவாக தக்காளி நம்பப்படுகிறது. 

அரிப்பு:

ஹிஸ்டமைன் என்பது தக்காளியில் உள்ள முக்கியமான சேர்மம் ஆகும். இதுதான் நமது உடலில் ஏற்படும் பலவித அலர்ஜிகளுக்கான காரணமாகும். வாய் மற்றும் நாக்கில் வீக்கம், இருமல், சருமம் சிவப்பாக தடித்தல், தொண்டை எரிச்சல் போன்றவை இதனால் ஏற்படும் விளைவுகளாகும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.

மூட்டு வலி 

இதில் உள்ள ஹிஸ்டமைன் மற்றும் சாலமைன் உடலில் கால்சியம் திசுக்களை உருவாக்கக்கூடியது. இது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். மூட்டுகளில் ஏற்படும் இந்த வீக்கம் அதிக வலியை ஏற்படுத்துவதுடன் தினசரி வேலைகள் செய்வதையே கடனமாக்கிவிடும். தொடர்ந்து அதிக தக்காளி சாப்பிடும்போது அது வாதம் ஏற்பட வழிவகுக்கும்.

வயிற்றுப்போக்கு

அதிகளவு அமிலங்கள் உள்ளதால் தக்காளி உங்கள் வயிற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தக்காளியில் உள்ள சலாமெனல்லா உங்களுக்கு அதிகளவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.

இருதய பிரச்சினைகள்

அடைக்கப்பட்ட தக்காளியானது மற்ற தக்காளியை விட அதிகளவு சோடியத்தை கொண்டிருக்கும். உடலில் அதிக அளவு சோடியம் சேர்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, அது கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகளை உண்டாக்கும். இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் பல இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Embed widget