ரூ.500 நோட்டுகள் இனி ATM-ல் கிடைக்காதா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு! உண்மை என்ன?
500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி (உத்தரவிட்டுள்ளதாக தவறான செய்தி பரவியது.. இருப்பினும், அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதல் ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் கிடைக்காது என்று தகவல் பரவிய நிலையில் அதனை மத்திய அரசு வதந்தி என மறுத்துள்ளது
பரவிய வதந்தி:
வாட்ஸ்ஆப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஏடிஎம்கள் மூலம் ரூ.500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவிட்டுள்ளதாக தவறான செய்தி பரவியது.. இருப்பினும், அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2026 ஆம் ஆண்டுக்குள் 90 சதவீத ஏடிஎம்கள் ரூ.500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்திவிடும் என்றும் இவற்றில், 75 சதவீதம் பேர் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஏடிஎம்களில் ரூ.500 ஐ வைத்திருக்க மாட்டார்கள் அந்த தவறான வாட்ஸ் ஆப் மேசேஜில் தெரிவிக்கப்பட்டிருந்தது
மேலும், இந்த செய்தி நாட்டு மக்களுக்கு ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது. எதிர்காலத்தில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்கள் மூலம் கிடைக்கும் என்று அந்த செய்தி கூறுகிறது.
PIB மறுப்பு
இதன் பின்னர், பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு இந்த செய்தி தவறு என்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அத்தகைய எந்த அறிவுறுத்தல்களையும் வெளியிடவில்லை என்று அதில் தெரிவித்தது. மேலும் ரூ.500 நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் எக்ஸ் பதிவில் தெரிவித்தது, சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் கூற்று தவறானது என்று PIB தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
செப்டம்பர் 2025க்குள் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகள் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதா? #WhatsApp இல் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது, இது குறித்து கூறப்பட்டுள்ளது. #PIBFactCheck, @RBI அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, ரூ.500 நோட்டுகள் சட்டப்பூர்வமாக இருக்கும் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது. "இதுபோன்ற தவறான தகவல்களுக்கு ஏமாறாதீர்கள். இந்தத் தகவலை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து செய்திகளைச் சரிபார்க்கவும்" என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இதேப் போல் வதந்தி:
இதேபோன்ற ஒரு தகவல் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வைரலானது. வாட்ஸ்அப்பிலும் பரவலாகப் பகிரப்பட்ட முந்தைய செய்தியில், 2026 ஆம் ஆண்டுக்குள் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகளை படிப்படியாக அகற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் பிஐபி உண்மைச் சரிபார்ப்பும் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது, அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தது























