மேலும் அறிய

வாக்காளர் பட்டியல் வெளியீடு ; உங்கள் பெயர் இருக்கா ? நீங்களே செக் பண்ணலாம் !! எப்படி தெரியுமா ?

சட்டமன்ற தேர்தலுக்கான சென்னை வாக்காளர்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2026 சட்டப்பேரவை தேர்தல் விரைவில்  நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் சென்னை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4 - ம் தேதி தொடங்கியது. சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்தது.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 10 - ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரி சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
 
இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
கூடுதலாக 1,180,73, புதிய ஆண் வாக்காளர்களும், 1,33,101 பெண் வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 222,792 வாக்காளர்களும் உள்ளனர்.
 
உங்கள் பெயர் உள்ளதா ? நீங்களே செக் செய்யலாம்
 
இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளதா  என்பதை voters.eci.gov.in அல்லது
electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI Net செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம். இந்த இணையத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள EPIC நம்பரை பதிவிட்டால், உங்களது பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 
சென்னை தொகுதி வாரியாக ; 
 
1. ராதாகிருஷ்ணன் நகர் ( ஆர்.கே.நகர் )
 
SIR -க்கு முன்பு - 2,35,272
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,78,356
இறுதி வாக்காளர் பட்டியல்- 1,95,856
 
2. பெரம்பூர் தொகுதி ;
 
SIR-க்கு முன்பு - 2,97,526
வரைவு வாக்காளர் பட்டியல்- 2,00,181
இறுதி வாக்காளர் பட்டியல்- 2,22,792
 
3. கொளத்தூர் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,90,653
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,86,841
இறுதி வாக்காளர் பட்டியல் -2,07,251
 
4. வில்லிவாக்கம் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,40,466
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,42,706
இறுதி வாக்காளர் பட்டியல் -1,59,764
 
5. திரு.வி.க நகர் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,23,571
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,64,528
இறுதி வாக்காளர் பட்டியல்-1,78,793
 
6. எழும்பூர் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 1, 97,465
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,22,607
இறுதி வாக்காளர் பட்டியல்- 1,34,879
 
7.ராயபுரம் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 1,98,576
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,46,865
இறுதி வாக்காளர் பட்டியல் - 1,56,931
 
8.துறைமுகம் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 1,80,341
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,10,517
இறுதி வாக்காளர் பட்டியல் -1,16,896
 
9.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ;
 
SIR - க்கு முன்பு - 2,40,087
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,50,846
இறுதி வாக்காளர் பட்டியல் -1,63,886
 
10. ஆயிரம் விளக்கு தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,38,374
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,41,393
இறுதி வாக்காளர் பட்டியல் -1 ,53,908
 
11.அண்ணாநகர் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,80,422
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,62,135
இறுதி வாக்காளர் பட்டியல் -1,81,402
 
12. விருகம்பாக்கம் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,85,947
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,75,123
இறுதி வாக்காளர் பட்டியல் -1,96,536
 
13.சைதாப்பேட்டை தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,73,717
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,86,489
இறுதி வாக்காளர் பட்டியல் -2,00,697
 
14. தி.நகர் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,35,497
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,39,498
இறுதி வாக்காளர் பட்டியல் -1,54,943
 
15. மயிலாப்பூர் தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 2,69,260
வரைவு வாக்காளர் பட்டியல் - 1,81,592
இறுதி வாக்காளர் பட்டியல் -1,94,731
 
16. வேளச்சேரி தொகுதி ;
 
SIR - க்கு முன்பு - 3,17,520
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,89,999
இறுதி வாக்காளர் பட்டியல் -2,11,691
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai MTC: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 520 புதிய ஏசி மினி பஸ்கள் -எம்.டி.சி-யின் மெகா பிளான்
Chennai MTC: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 520 புதிய ஏசி மினி பஸ்கள் -எம்.டி.சி-யின் மெகா பிளான்
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
நகராட்சி பணி நியமன வழக்கு: அதிமுகவுக்கு ‘அவசரம் ஏன்? -உயர்நீதிமன்றம் கேள்வி !
நகராட்சி பணி நியமன வழக்கு: அதிமுகவுக்கு ‘அவசரம் ஏன்? -உயர்நீதிமன்றம் கேள்வி !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget