மேலும் அறிய

DMDK - DMK: கடைசி நேர ட்விஸ்ட்... திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. ஷாக்கான இபிஎஸ் தரப்பு!

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செயும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செயும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அக்கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது.  அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, அமமுக போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் தேமுதிக திமுக கூட்டணியில் முதல்முறையாக இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த 2016ம் ஆண்டு திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மிகப்பெரிய அளவில் முயற்சி மேற்கொண்டார். ஆனால் தேமுதிக தலைமையிலான மக்கள் நல கூட்டணி அமைந்து வாக்குகள் பிரிய இரண்டாவது முறையாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இப்படியான நிலையில் 2026ம் ஆண்டு தேர்தல் களம் மிக கடினமாக மாறியுள்ளது.

அதனை எதிர்கொள்ள தேமுதிகவின் பங்கு தேவை என்பதை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் நன்கு உணர்ந்திருந்தது. அதனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க இரு தரப்பும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் திடீரென பிரேமலதா தலைமையிலான தேமுதிகவினர் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தனர். தொடர்ந்து திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.  நிர்வாகிகள் விருப்பத்திற்கேற்ப திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேமுதிக சார்பில் அமைக்கப்படும் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேமுதிக சட்டமன்ற தேர்தல் வரலாறு

கட்சி தொடங்கி 2006ம் ஆண்டு முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த தேமுதிக 2 இடங்களை வென்றது. தொடர்ந்து 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தொடர்ந்து 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணி அமைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் அத்தேர்தலில் படுதோல்வியடைந்தது. தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலை டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தலில் ஒரு இடம் கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget