ஜீ தமிழ் வீரா சீரியலில் என்ட்ரி தரும் பிரபல நடிகர்.. அடடா இவரா.. யார் அவர் தெரியுமா?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் முக்கிய நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று வீரா. இந்த சீரியலில் வரும் கதாப்பாத்திரங்களில் மிகவும் பிடித்த ஜோடியாக மாறன், வீரா இருக்கின்றனர். இந்த ஜோடி வந்தாலே கலகலப்பாகவும், ரசிக்கும் விதமான காதல் காட்சிகளால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராமகிருஷ்ணன் குடும்பத்தில் பல பிரச்னைகள் வெடித்த போதும் அனைத்தையும் தனது சாமர்த்தியத்தால் முறியடித்து வருகிறார் மாறன். வீராவிற்கு மாறனை பிடித்திருந்தாலும், தனது அண்ணனை கொன்றவன் மாறன் தான் என்பதால் அவரிடம் நெருக்கம் காட்டுவதில் தயக்கம் காட்டுகிறார்.
கண்மணி தற்போது ராமகிருஷ்ணன் குடும்பத்து வாரிசை சுமந்து வருகிறார். இதனால், ராமகிருஷ்ணன் ஃபேமிலியை பலிவாங்குவதை நிறுத்திக்கொண்டார். குறுக்கு வழியில் மருமகளாக வந்திருக்கும் விஜியின் ஆட்டமும், திட்டமும் தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் பிரச்னையோடு வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு ஒரு முக்கியமான நடிகர் வீரா சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சமூகவலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் ராகவேந்திரா. அதேபோன்று காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், வீரா சீரியலில் ராகவேந்திரா இன்றைய எபிசோட் முதல் பாலாஜி கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுக்கிறார். இதை காண மக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
View this post on Instagram





















