Karthigai Deepam: ரம்யாவுக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவுக்கு அவரது அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டதாக போன் வர அபிராமி வீட்டிற்கு வந்த அவள் கார்த்தியை பார்க்காமலேயே பதறியடித்து ஓடிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரம்யா ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்து அப்பா பெயரை சொல்லி விசாரிக்க ரிஷப்ஷனில் அப்படி யாரும் அட்மிட் ஆகல என்று சொல்கின்றனர், இதனால் ரம்யா வீட்டிற்கு ஓடி வர அங்கே அப்பா சாதாரணமாக உட்கார்ந்திருப்பதை பார்க்கிறாள். அவர் ஏன் மா என்னாச்சு எதுக்கு இப்படி பதற்றமாக வர என்று விசாரிக்க நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
பின்னாடியே வீட்டிற்கு வரும் தீபா ரம்யாவுக்கு உங்களுக்கு ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு, உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று விசாரிக்கிறாள். அவர் எனக்கு எதுவும் இல்ல உங்களுக்கு அப்படி யார் போன் பண்ணி இருப்பா என்று கேட்க ரம்யா போன் வந்த நம்பருக்கு திருப்பி கூப்பிட போன் சுவிட்ச் ஆப் என வருகிறது.
மறுபக்கம் ரியாவும் ஐஸ்வர்யாவும் கார்த்திக் தீபாவின் புருஷன் என்பது ரம்யாவுக்கு தெரிய கூடாது. இந்த திருமண நாள் கொண்டாட்டத்தில் கார்த்திக், ரம்யா மீட் பண்ணிக்கவே கூடாது என்று திட்டம் போடுகின்றனர். இதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஜவுளிக்கடைக்கார் ஒருவரிடம் சொல்லி புடவைகளை எடுத்து வர சொல்லி தீபாவை கூப்பிட்டு பிடித்த புடவையை எடுக்க சொல்கிறார் அபிராமி.
தீபா புடவையை தேர்வு செய்ய போகும் சமயத்தில் பூஜையறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க ஓடி வந்து பார்க்கும் போது பூஜை அறை சீலிங் உடைந்து விழுந்தது தெரிய வருகிறது, அங்கே ஒரு கருநாகமும் இருக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஏதோ அபசகுணமாக தெரியுது என்று ஜோசியரை வீட்டிற்கு வர சொல்கின்றனர்.
வீட்டிற்கு வந்த ஜோசியர் கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் இந்த வீட்டில் இருக்க கூடாது, இந்த வீட்டில் நல்ல காரியம் எதுவும் நடக்க கூடாது எனவும் சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.