Karthigai Deepam: சிறையில் தள்ளப்பட்ட சாமுண்டீஸ்வரி.. லேடி கெட்டப்பில் மயில்வாகனம் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துவேல் நகைகள் போலியாக இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக சொன்ன நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிறையில் தள்ளப்பட்ட சாமுண்டீஸ்வரி:
அதாவது, சாமுண்டீஸ்வரி மற்றும் சிவனாண்டி ஆகியோர் மத்தியில் வாக்குவாதம் உருவாகிறது. ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி, "நகையை பரிசோதனை செய்து பாருங்க" என்று சொல்கிறாள். பிறகு ஆசாரி ஒருவரை வரவழைத்து நகைகளை பரிசோதனை செய்ய, அனைத்தும் போலி நகை என்பது தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைகின்றனர்.
கார்த்திக், "அத்தை இப்படி எல்லாம் செய்திருக்க வாய்ப்பு இல்லை" என சந்தேகமடைந்து, சாமுண்டீஸ்வரியை காப்பாற்றும் வேலையில் இறங்குகிறான். அடுத்ததாக, சந்திரகலா சாமுண்டீஸ்வரியை சந்தித்து, "இதற்கெல்லாம் காரணம் கார்த்திக் தான்.. கார்த்திக் தான் உன்னை ஜெயிலில் தள்ள இப்படி பண்ணி இருக்கான்" என்று ஏற்றி விட, ராஜராஜன் "மாப்ள அப்படி செய்யிற ஆள் கிடையாது" என சப்போர்ட் செய்து பேசுகிறார்.
லேடி கெட்டப்பில் மயில்வாகனம்:
மறுபக்கம் கார்த்திக் மயில் வாகனத்திடம் அத்தையை காப்பாத்த, நீங்க தான் சகல உதவி பண்ணனும் என்று சொல்லி திட்டம் ஒன்றை சொல்ல அடுத்து மயில்வாகனம் லேடி கெட்டப்பில் வந்து முத்துவேலை தனியாக அழைத்துச் செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















