Karthigai Deepam: ரேவதியை சுட்டுத் தள்ளிய மாயா.. உயிர் பிழைப்பாளா கார்த்திக்கின் மனைவி? கார்த்திகை தீபத்தில் திக் திக்
மாயாவை ரேவதி துப்பாக்கியால் சுட்ட நிலையில், ரேவதி உயிர் பிழைப்பாளா? என்பது குறித்து கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
சுவாதியைப் பாடச் சொன்ன சாமுண்டீஸ்வரி:
இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் மாயா ரேவதியைக் கொல்ல துப்பாக்கியுடன் கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து இறங்குகின்றனர். பிறகு கொலு பூஜை தொடங்க சாமுண்டீஸ்வரி என் பொண்ணு சுவாதி நல்லா பாடுவா என்று சொல்ல சுவாதி பாட்டு பாடுகிறாள். அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
ரேவதியை சுட்ட மாயா:
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் எல்லோருக்கும் பிரசாதத்தை கொடுக்க தொடங்குகின்றனர். பிரசாதம் வாங்க வரிசையில் நிற்கும் ஆட்களின் ஒருவராக மாயா முகம் முழுவதும் மஞ்சளை பூசிக்கொண்டு நிற்கிறாள்.
இதற்கிடையில் கார்த்திக்கு போலீஸ் தரப்பிலிருந்து ஒரு போன் கால் வருகிறது. அதாவது மாயா தப்பிவிட்டதாக ரேவதியைக் கொல்ல வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி கொடுக்கின்றனர். அதற்குள் இங்கே மாயா ரேவதியை சுட ரேவதி சரிந்து விழுகிறாள்.
உயிர் பிழைப்பாளா ரேவதி?
இதனால் சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மாயா அங்கிருந்து தப்பித்து விட கார்த்திக் கண்ணீருடன் ரேவதியை காரில் தூக்கி போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறான். உனக்கு ஒன்னும் ஆகாது ரேவதி நான் இருக்கேன் என்று ஆறுதல் சொன்னபடி ஹாஸ்பிடலுக்கு வருகிறான்.
ரேவதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தவன் போலீசையை அழைத்து அந்த மாயாவை பிடிச்சிட்டீங்களா? என்னாச்சு என்று விசாரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடில் காணலாம்.





















