Yuvan Shankar Raja: Vibe ஜோதியில் ஐக்கியம் ஆன யுவன் சங்கர் ராஜா! யுவன் பகிர்ந்த சூப்பர் வைப்!!
வாமனன் படத்தில் அவர் இசையமைத்து நா. முத்துக்குமார் எழுதிய “ஏதோ செய்கிறாய்” என்ற பாடலை இளைஞர்கள் பாடுவது போன்றும், அதில் ஹார்ட்டின்கள் வருவது போன்றும் வீடியோ ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார்.
உலகத்தில் இப்போது யார் என்ன பேசினாலும் அதற்கான கச்சா ஏதேனும் ஒருவகையில் சமூக வலைதளங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் இருக்கும் ட்ரெண்ட்படி உலகில் தற்போது பல்வேறு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ட்விட்டர், ஃபேஸ்புக் என நெட்டிசன்கள் செய்யும் க்ரியேட்டிவ் வேலை தற்போது உச்சம் பெற்றுள்ளது. அதன்படி சமீபமாக சமூக வலைதளங்களில் Vibe என்ற ஒரு சொல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சினிமா பாடல்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பகுதிக்கு சில நொடிகள் முன்னிலிருந்து ஆரம்பித்து ரசிகர்களை கவர்ந்த போர்ஷன் வரும்போது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளையோ இல்லை வேறு ஏதேனும் வீடியோவையோ வைத்து ஹார்ட்டின்கள் வருவதுபோல் உருவாகியிருக்கிறது வைப் வீடியோ (Vibe).
மேலும் வாசிக்க: Vijay Rolls Royce Issue: முடிவுக்கு வந்தது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்! அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
இதில் பெரும்பாலும் இசைஞானி இளையராஜா, இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா என தமிழ் சினிமாவின் பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வைப் வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களிலும் பலத்த வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவும் தற்போது வைப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாமனன் படத்தில் அவர் இசையமைத்து நா. முத்துக்குமார் எழுதிய “ஏதோ செய்கிறாய்” என்ற பாடலை இளைஞர்கள் பாடுவது போன்றும், அதில் ஹார்ட்டின்கள் வருவது போன்றும் வீடியோ ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, யுவன் ஷங்கர் ராஜாவும் வைப் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் எனக்கூறி அந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
February 2022 OTT release: பிப்ரவரி மாதம் ஓடிடியை தெறிக்கவிடப்போகும் 5 திரைப்படங்கள் என்னென்ன?