February 2022 OTT release: பிப்ரவரி மாதம் ஓடிடியை தெறிக்கவிடப்போகும் 5 திரைப்படங்கள் என்னென்ன?
OTT release February 2022: டாப்ஸி உடன் இணைந்து தாஹிர் ராஜ் பாசின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, டிப்யெண்டு பட்டாச்சாரியா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில், ஓடிடி மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கும் வழக்கம், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மக்களும் அதிக ஆர்வத்துடன் இருப்பதால், திரையரங்கில் வெளிவராமல், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, தியேட்டர்களில் வரும் படங்கள், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாகும். அப்படி நேரடியாகவும், தியேட்டர் ரிலீஸின் வெற்றிக்கு பிறகும், ஓடிடி தளங்களில், பிப்ரவரி மாதம் வரும் 5 அதிரடி திரைப்படங்கள் என்னவென்று பார்ப்போம்.
கெஹ்ரையான் - அமேசான் ப்ரைம் - பிப்.11
தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஹ்ரையான்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. நவீன காதலர்களையும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களையும் ஒரு முக்கோணக் காதல் வழியாக சொல்லும் படமாக தெரிகிறது ‘கெஹ்ரயான்’. தீபிகா - சித்தாந்த் இடையிலான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரிதளவில் கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ற சில ‘போல்ட்’ ஆன காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க வருகின்றன.
லூப் லப்பேட்டா - நெட்ப்ளிக்ஸ் - பிப்.4
ஜெர்மானிய இயக்குநர் டாம் டைக்வேர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ரன் லோலா ரன்'. பிராங்கா பொடன்டி, மொரிட்ஸ் ப்ளெயிப்ட்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தை தழுவி 'லூப் லபீடா'(Looop Lapeta) எனும் பாலிவுட் திரைப்படம் உருவாகவுள்ளது.
சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா தயாரித்துள்ள லூப் லப்பேட்டா இயக்குனர் படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்கியுள்ளார். டாப்ஸி உடன் இணைந்து தாஹிர் ராஜ் பாசின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, டிப்யெண்டு பட்டாச்சாரியா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லூப் லப்பேட்டா படத்திற்கு யாஷ் கண்ணா ஒளிப்பதிவில், கௌரவ் பரிக் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
த்ரூ மை விண்டோ - நெட்பிளிக்ஸ் - பிப். 4
ராக்குலுக்கு தனது பக்கத்து வீட்டுக்காரர் மீது நீண்டகாலமாக இருந்த ஈர்ப்பு, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, உணர்வுகளை வளர்க்கத் தொடங்கும் போது மேலும் ஏதோவொன்றாக மாறுகிறது. த்ரூ மை விண்டோ என்பது வெனிசுலா எழுத்தாளர் அரியானா கோடோயின் 2016 வாட்பேட் நாவலின் தழுவலாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் பிப். 4 ஆம் தேதி வெளியாகிறது.
ஐ வான்ட் யூ பேக் - அமேசான் ப்ரைம் - பிப். 11
பீட்டர் (சார்லி டே) மற்றும் எம்மா (ஜென்னி ஸ்லேட்) ஆகியோர் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணங்களாக நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். திருமணம், குழந்தைகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகள் என வாழ்ந்துவிட்ட இணையர், தங்கள் வாழ்க்கையின் காதல்கள் ஏற்கனவே இல்லாமல் போய்விட்டது என்பதை அறிந்து திகிலடைந்த பீட்டரும் எம்மாவும் அடுத்தடுத்து எதிர்பாராத முடிவுகளுடன் திரும்பவும் தங்களுக்குள் இருக்கும் முன்னாள் நபர்களை மீட்டெடுக்க பெரும் திட்டத்தை வகுக்கின்றனர். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைமில் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகிறது.
சைல்டு ஆஃப் கமியாரி மந்த் - நெட்பிளிக்ஸ் - பிப். 8
தனது தாயை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு இளம் பெண் ஜப்பானின் புனித பூமியான இசுமோவில் வருடா வருடம் கடவுள்கள் கூடும் இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்கிறாள். தகனா ஷிராய் இயக்கிய இப்படம் ஜப்பானிய திரையரங்குகளில் அக்டோபர் 8, 2021 அன்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது நெட்பிளிக்ஸில் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகிறது.