Hip Hop Aadhi Interview: யுவன் என்னை அடிச்சி துரத்தல.. அவ்வளவுதான் - மெமரிகளை தூசு தட்டிய ஹிப் ஹாப் ஆதி..
அப்ப என்னோட நோக்கம் அவர பார்த்து அவர் கூட ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும் அப்படிங்கிறதாதான் இருந்துச்சு. அங்க போயும் அப்படித்தான் நின்னுட்டு இருந்தேன்.
இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அஸ்வின் ராம் இயக்கியுள்ள திரைப்படம் அன்பறிவு. இந்தப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி, விதார்த், நெப்போலியன், காஷ்மீரா, சாய்மீரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் அன்றைய தினமே படம் வருகிற 7 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
படக்குழு தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அண்மையில் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஹிப் ஹாப் ஆதி நான் யுவன் ஷங்கர் ராஜாவின் வெறித்தனமான ஃபேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும் போது, “ வை ராஜா வை படத்துல யுவன் இசையமைச்ச ‘வை ராஜா வை’ பாட்ட நான் எழுதி பாடினேன். அது எனக்கு ட்ரீம் கம் ட்ரூ. ஒரு மணி நேரம்தான் அந்த பாட்ட நாங்க ரெக்கார்டு பண்ணோம். மீதி 2 மணி நேரம் யுவனோடதான் பேசிட்டு இருந்தோம். கடைசியா அவர் அடிச்சு துரத்தல அவ்வளவுதான். அவ்வளவு நேரம் பேசுனோம்.
எங்கிட்ட அவர் ரொம்ப நல்லா பேசினாரு. நான் யுவனோட டை ஹார்டு ஃபேன். அதனால நாங்க அன்னைக்கு ஃபேன் மோடுல இறங்கிட்டேன். நான் அவரோட டை ஹார்டு ஃபேன் அப்படிங்கிறது அவருக்கே தெரியும்.
View this post on Instagram
2015 லதான் வை ராஜா வை படம் வந்துச்சு. ஆனா நாங்க 2014 -லயே பாட்ட ரெக்கார்டு பண்ணிட்டோம். அதுக்கு முன்னாடி கத்தியில ஒரு பாட்டு பாடியிருந்தேன். அப்புறம்தான் யுவன் கூப்பிட்டாரு. அப்ப என்னோட நோக்கம் அவர பார்த்து அவர் கூட ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும் அப்படிங்கிறதாதான் இருந்துச்சு. அங்க போயும் அப்படித்தான் நின்னுட்டு இருந்தேன். உடனே போய் பாடுப்பா அப்படினு சொன்னாரு. அந்தப் பாட்ட நான் எழுதும் போது யுவன் ஃபேனா நினைச்சுதான் எழுதுனேன். யுவன் இசையமைச்சதுலயே எனக்கு புன்னகை பூவே படத்துல என் காதல் அப்படிங்கிற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ” எனத் தெரிவித்துள்ளார்.