மேலும் அறிய

இயக்குநர் அவதாரம் எடுக்கும் யுவன்ஷங்கர் ராஜா… ரசிகர்களுக்கு ஒரு உற்சாக டானிக்..

இசையமைப்பாளராக இருந்த யுவன் சங்கர் ராஜா இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார் என்பதை உறுதி செய்தது மட்டுமின்றி, அந்த திரைப்படத்தில் யார் ஹீரோ என்று கேட்ட கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் மிக முக்கியமான டாப் இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார். 1996 ம் ஆண்டு தனது 16வது வயதில் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைக்க துவங்கிய யுவன், இன்று 25 ஆண்டுகளை கடந்து இசை காதலர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். பிஜிஎம் என்றாலே யுவன் தான் என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள், டைரக்டர்கள், பிரபலங்களின் மனங்களை கவர்ந்த யுவன், பிஜிஎம் கிங் என அனைவராலும் புகழ்ப்படுகிறார். திரைத்துறையில் தனது 25 ஆண்டு பயணம் குறித்து, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி யுவன் சங்கர் ராஜா, "இந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வளர்ச்சியையும் தாழ்வையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் என்றைக்கும் உங்களுடைய சப்போர்ட் இருக்கும் என்று நம்புகிறேன். அரவிந்தன் படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி இன்று வலிமை வரை வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன" என்று உணர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் பேசினார். மனதை மயக்கும் இசையை வாரி வழங்குவதில் இவருக்கு இணை இவர் மட்டும் தான். இதுவரை 100 க்கும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ள யுவன்சங்கர் ராஜா, கோலிவுட்டின் டாப் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் பணியாற்றி விட்டார்.

இதுவரை இசையமைப்பாளராக மட்டும் அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்த யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் ஆனார். அதையடுத்து இப்போது ஏலிஸ் மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களை யுவன் சங்கர் ராஜா தற்போது தயாரித்து வருகிறார்.  இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரை உலகில் அறிமுகமாகி நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த நீண்ட பயணத்தில், இசை ரசிகர்களை அள்ளி குவித்திருக்கும் யுவன், மக்களுக்கு பிடித்த இசையை தொடர்ந்து இசைத்து வருகிறார். நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மீடியாக்களை சந்தித்து, இதுவரை தனக்கு அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவித்தார் யுவன். அதோடு தனது வருங்கால பிளான் பற்றியும் யுவன் ஓப்பனாக பேசி உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு திரைப்படம் இயக்கப்போகிறார் என்று சில நாட்களாக அரசல் புரசலாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்து இந்த சந்திப்பில் அப்டேட் கொடுத்துள்ளார். 

இந்த சந்திப்பில் ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் எக்ஸ்க்ளூசிவ் பதில்கள் சொன்னதுடன் பல அப்டேட்டுக்களை வெளியிட்டார். அதோடு சேர்த்து புதிய சர்பிரைஸ் ஒன்றையும் ரசிகர்களுக்காக தெரிவித்துள்ளார். அதுஎன்னவென்றால், இசையமைப்பாளராக இருந்த யுவன் சங்கர் ராஜா இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார் என்பதை உறுதி செய்தது மட்டுமின்றி, அந்த திரைப்படத்தில் யார் ஹீரோ என்று கேட்ட கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார். இந்த திரைப்படம் வழக்கமான ஹீரோ சப்ஜெக்டாக இல்லாமல், ஹீரோயின் மையப்படுத்திய படமாக இருக்குமாம். பெண்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2023 ஆண்டு தொடக்கத்தில் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Embed widget