மேலும் அறிய

Parthiban | கூலாக பார்த்திபன்... கோபத்தில் கெளதம் கார்த்திக்; வேற லெவலில் வெளியான போஸ்டர்.. இதோ புது அப்டேட்..

நடிகர் பார்த்திபன், கெளதம் கார்த்திக் நடிக்கும், யுத்த சத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை உள்ளவராக வலம் வருபவர் பார்த்திபன். தனக்கென ஒரு "புதிய பாதை"யில்  பயணிக்கும் இவர் அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்து உள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் குறைவாக வரவேற்பு கிடைத்திருந்தாலும், தற்போது இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக பார்த்திபன் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி, தயாரித்திருந்த "ஒத்த செருப்பு" திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு நிறைய வெளிநாட்டு மேடைகளில் பல விருதுகளும் வாரி குவித்தன. இதில் நடிகர் பார்த்திபன் ஒரே ஆளாக நடித்து, இயக்கி, தயாரித்தும் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சியை கையாண்டு இருந்தார். 

பார்த்திபன் தற்போது ‘துல்லாத மனமும் துள்ளும்’,’தீபாவளி’,’தேசிங்கு ராஜா’ஆகிய வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் எழில் இயக்கத்தில் நடித்துள்ளார். யுத்த சத்தம் என பெயரிடபட்டுள்ள இப்படம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார். அதில், கூலாக பார்த்திபன் போஸ் கொடுக்க, கெளதம் கார்த்திக் மிகவும் கோபமாக இருப்பதுபோல் இடம் பெற்றுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் எழில் கூறியதாவது,  “யுத்த சத்தம் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஏனென்றால் இந்த படம்,  என் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. இதுவரை நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய எனக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. பார்த்திபனிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்று இருக்கிறேன். இப்போது கூட அவர் என் ஆசான் தான்” எனக் கூறியுள்ளார். 

இதில் நாயகியாக சாய் பிரியா நடிக்கிறார். ஏற்கனவே இவர் எண்டே உம்மண்ட பேரு என்ற மலையாள படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். டி இமான் இசையமைக்கும் இதில், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கல்லால் குளோபல் நிறுவனம் மற்றும் இயக்குநர் எழில் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் மூர்த்தி, முத்தையா கண்ணதாசன், மிதுன் மகேஸ்வரன், காமராஜ், ரோபோ சங்கர், மனோபாலா, சாம்ஸ், மது ஸ்ரீ,  கும்கி அஸ்வின், வையாபுரி, உள்ளிட்டோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Embed widget