Yogi Babu: திடீரென விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்த யோகிபாபு... காரணம் தெரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்!
காமெடி நடிகர் யோகி பாபு நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளை தனது சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளார். திடீரென யோகி பாபு இதை பகிர்ந்ததன் காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
![Yogi Babu: திடீரென விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்த யோகிபாபு... காரணம் தெரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்! Yogi Babu shares his memories about Captain Vijayakanth in his social media Yogi Babu: திடீரென விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்த யோகிபாபு... காரணம் தெரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/164053386448789f12f06b68b9f75c4c1667384905571224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பல திறமையான நகைச்சுவை நடிகர்களை இந்த தமிழ் சினிமா கண்டுள்ளது. தற்போது மிகவும் ட்ரெண்டிங்கில் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஒரு காமெடியன் யோகி பாபு.
நேரில் சென்று அழைப்பு :
இவர் சமீப காலமாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவரின் காமெடிகள் குழந்தைகளையும் கவர்கிறது. தன்னுடைய தோற்றத்தையே ஒரு பிளஸ் பாயிண்ட்டாக மாற்றிய ஜெகஜால கில்லாடி. 2020ம் ஆண்டு இவருக்கும் பார்க்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் எளிமையான முறையில் குலதெய்வ கோயிலில் நடைபெற்றது. அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் சென்று விஜயகாந்த்துக்கு அழைப்பு வைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று இருந்தார் யோகி பாபு. அப்போது கேப்டனுடன் நடிகர் யோகி பாபு எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
— Yogi Babu (@iYogiBabu) November 2, 2022
விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்து யோகி பாபு :
அந்த வீடியோவை தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கேப்டன் விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் யோகி பாபு. இந்த வீடியோவிற்கு பின்னணியில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்த "சின்ன கவுண்டர்" படத்தில் சூப்பர் ஹிட் பாடலான "இந்த வானத்தை போல மனம் படைத்த சின்னவனே... " பாடல் ஒலிக்கிறது. திடீரென நடிகர் யோகி பாபு கேப்டனின் நினைவுகளை பகிர என்ன காரணமாக இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.
View this post on Instagram
கேப்டனுக்கு ஈடு இணை இல்லை :
நடிகர் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு நல்ல மனிதர். அனைவரிடமும் வேறுபாடு இன்றி ஒன்று போலவே பழக கூடியவர். இப்படி ஒரு மனிதாபிமானமுள்ள ஒரு மனிதர் உடல் நிலை சரியில்லாமல் ஒரே இடத்தில் முடங்கி இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. நமது கேப்டனுக்கு ஈடு இணையாக யாருமே வரமுடியாது. இந்த பதிவை பகிர்ந்ததன் மூலம் நம்முடைய நினைவுகளையும் கேப்டன் பக்கம் திருப்பியுள்ளார் நடிகர் யோகி பாபு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)