KGF 2 Collection: பாகுபலியின் மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்த கே.ஜி.எஃப்.. வாயைப்பிளந்த இந்திய சினிமா..!
KGF 2 Box Office Collection: கே.ஜி.எஃப் 2 படமானது பாகுபலி பாகம் 1 -ன் மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்திருக்கிறது
கே.ஜி.எஃப் 2 படமானது பாகுபலி பாகம் 1 யின் மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்திருக்கிறது
யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
View this post on Instagram
வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம், விரைவில் 1000 கோடியை எட்ட இருக்கிறது. அந்த வகையில், சினிமா ட்ராக்கரான மனோ பாலா விஜயன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த 7 நாட்களில் 676.80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
#KGFChapter2 WW Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) April 20, 2022
REFUSES to slow down.
Day 1 - ₹ 165.37 cr
Day 2 - ₹ 139.25 cr
Day 3 - ₹ 115.08 cr
Day 4 - ₹ 132.13 cr
Day 5 - ₹ 73.29 cr
Day 6 - ₹ 51.68 cr
Total - ₹ 676.80 cr
Now, 8th HIGHEST grosser in just 6 days.#Yash #KGF2
இந்த சாதனை மூலம் கே.ஜி.எஃப் 2 திரைப்படம், பாகுபலி பாகம் 1 படம் வசூலித்த மொத்த தொகையை , 7 நாட்களில் முறியடித்த படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.இந்தப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்திற்கு போட்டியாக விடப்பட்ட இந்தப் படம் அதை விட வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு அதிக காட்சிகளை ஒதுக்க முன்வந்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்