Yaanai Movie Update: பொங்கலுக்கு தயாராகுங்க... ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட்ட யானை படக்குழு!
வருகின்ற ஜனவரி 13 ம் தேதி 'யானை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரியின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் படம் யானை. அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
ட்ரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா, தலைவாசல் விஜய், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தநிலையில் வருகின்ற ஜனவரி 13 ம் தேதி 'யானை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த படத்தின் கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#Yaanai a @gvprakash musical 😊 first single from Jan 13th! @arunvijayno1 #DirectorHARI pic.twitter.com/nas9SC0Y2b
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 9, 2022
முன்னதாக, யானை படத்தின் போஸ்டரும், பெயரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியானது. யானை படம் அருண்விஜய்க்கு 33ஆவது படம் என்பதால் போஸ்டரை 33 பிரபலங்கள் பகிர்ந்திருந்தனர்.
Very Happy to release the teaser of @arunvijayno1's #Yaanai 🐘 Best wishes to entire team.
— venkat prabhu (@vp_offl) December 23, 2021
▶️ https://t.co/4MWLkpjxTz
#DirHARI @DrumsticksProd @priya_Bshankar @realradikaa @iYogibabu @gvprakash @thondankani @Ammu_Abhirami@0014arun @ertviji @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/0BWtP3ckll
முன்னதாக, யானை படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் 23 ம் தேதி வெளியாகியது. அதில், பாம்பன் பாலம் ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், பெரும் துரோகம், ஒரு நட்பு, பெரும் பகை என்ற வசனத்துடன் தொடங்கும் டீசரானது தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும் என்ற வசனத்துடன் முடிவடைகிறது.
ஹரி படத்தில் வழக்கம்போல் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இதிலும் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் அருண் விஜய்க்கு அவரது உறவினரான ஹரி இயக்கும் இந்தப் படத்தின் மூலம் அது கிடைக்கும் எனகூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்