Sonia Agarwal : ’விஜய்யை பார்த்தால் இந்த கேள்வியை கேட்பேன்..அவர் பதில் சொல்லணும்..’ சோனியா அகர்வால்
நடிகர் விஜய்யைப் பார்த்தால் நான் இந்தக் கேள்வியைக் கேட்பேன் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
![Sonia Agarwal : ’விஜய்யை பார்த்தால் இந்த கேள்வியை கேட்பேன்..அவர் பதில் சொல்லணும்..’ சோனியா அகர்வால் Would like to meet Vijay and pose a question: Sonia Agarwal Sonia Agarwal : ’விஜய்யை பார்த்தால் இந்த கேள்வியை கேட்பேன்..அவர் பதில் சொல்லணும்..’ சோனியா அகர்வால்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/26/68a94b38d5dc34f03b416d584a1388bb1666796339930109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய்யைப் பார்த்தால் நான் இந்தக் கேள்வியைக் கேட்பேன் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இளைஞர்களின் ஏஞ்சலாக மாறிய அவர் சிலம்பரசனின் ‘ கோயில்’ அடுத்தாக செல்வாவுடன் ‘ 7ஜி ரெயின்போ காலனி’ ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குநர் செல்வராகவனை காதலித்த சோனியா அவரையே கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால் அவர்களிடையே இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் , தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் நடிப்பில் , காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மதுர என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
விஜய்யுடன் நடித்தது குறித்து ஒரு பேட்டியில், ”எப்போதும் நடிகர் விஜய் மேல ஆன் ஸ்க்ரீன் கிரஷ் உண்டு. அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் நான் அதை அவரிடம் சொல்லியதில்லை. விஜய் எப்போதும் அமைதியாக அதிகம் பேசாமல் இருப்பார். ஆரம்பத்தில் அவருடன் நான் அதிகம் பேசாவிட்டாலும் கூட பின்னாளில் அவருடன் நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது” என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் சோனியா அகர்வாலிடம் நீங்கள் இப்போது எந்த செலிப்ரிட்டியிடம் பேச விரும்புகிறீர்கள், என்ன கேள்வி கேட்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து பதிலளித்த சோனியா அகர்வால், ”எனது விஷ் லிஸ்டில் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு விஜய்யிடம் பேச ஆசையாக இருக்கிறது. அவரே ஒரு மேஜிக்தான். அவரைச் சுற்றி நடப்பதெல்லாமே மேஜிக்கல் நிகழ்வுகள் தான். அந்த மேஜிக் எப்படி உங்களுக்கு சாத்தியமானது” என்று அவரிடம் கேட்பேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)