மேலும் அறிய

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி புகையிலை இல்லா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி புகையிலை இல்லா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்த நாளில் உலகம் முழுவதும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் புகையிலை பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக பல முன்னெடுப்புகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  புகைப்பழக்கத்தை பின்பற்றி பின்னர் அப்பழக்கத்தைவிட்ட தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார்?

அஜித்குமார்:
World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தனது இளமை பருவம் முதல் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். எனினும் ஷாலினியை திருமணம் செய்து கொண்டபிறகு புகைப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டார். 

ரஜினிகாந்த்:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினி. இவர் தன்னுடைய தொடக்க காலத்தில் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் பழக்கத்தை தனது திரைப்படத்தில் வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அண்ணாமலை படத்தில் அமர்ந்து கொண்டு புகைப்பிடிக்கும் காட்சி பலரையும் ஈர்த்தது. எனினும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது முதல் சிகரெட் பிடிப்பதை அவர் அடியோடு நிறுத்திவிட்டார். 

கமல்ஹாசன்:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

சினிமா உலகில் மிகவும் போற்றப்படும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன்தான். நடன கலைஞர், பாடகர், நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட மாபெரும் கலைஞர் கமல்ஹாசன். இவர் தனது 11 வயது முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். எனினும் அதில் இருக்கும் தீங்கை உணர்ந்து உடனடியாக புகைப்பிடிப்பதை கைவிட்டார். 

மம்மூட்டி:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர் மம்மூட்டி. இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரும் பலரை போல் புகைப்பிடிக்கும் பழக்கத்துடன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய வாழ்வில் சிகரெட்டை தொடாமல் புகைப்பழக்கத்தை அடியோடு நிறுத்தியுள்ளார். 

'தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!

மகேஷ் பாபு:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

தெலுங்கு திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. இவர் புகைப்பழக்கத்திற்கு மிகவும் தீவிரமாக அடிமையாகி இருந்தார். எனினும் தன்னை பார்த்து தன்னுடைய ரசிகர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது என்பதற்காக அந்தப் பழக்கத்தை கைவிட்டார். அப்போது முதல் திரையிலும் நிஜ வாழ்கையிலும் அவர் புகைப்பிடிப்பதே இல்லை.

ராணா டகுபதி:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

தெலுங்கு திரையுலகில் வலம் வரும் அசத்தலான நடிகர்களில் இவரும் ஒருவர். பாகுபலி படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தி ரசிர்களை அதிக ஈர்த்தவர். இவர் முதலில் சினிமா படங்களுக்காக புகைப்பிடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் புகைப்பழக்கத்திற்கு அப்படியே அடிமையாகி உள்ளார். பின்னர் மருத்துவரின் அறிவுரையை கேட்டு தற்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளார். 

விவேக் ஒபராய்:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

நடிகர் விவேக் ஒபராய் தீவிர புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். இவர் மும்பையிலுள்ள புற்றுநோய் மருத்துவமனையை ஒருமுறை சென்று பார்த்துள்ளார். அங்கு இருக்கும் நோயாளிகளின் நிலை கண்டவுடன் இனிமேல் புகைப்பிடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். அப்போது முதல் அவர் கையில் சிகரெட்டை எடுக்கவில்லை.

ஜெயசூர்யா:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

மலையாள நடிகர்களில் ஒருவர் ஜெயசூர்யா. இவர்  சராசரியாக ஒரு நாளைக்கு 10 சிகரெட் வரை பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். அது அவருடைய உடல்நிலையை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தியுள்ளார். 

வெற்றி மாறன்:

World No Tobacco day | இனிமே சிகரெட் பிடிக்காதீங்க.. ஸ்மோக்கிங்கை தூக்கியெறிந்த நடிகர்களோட லிஸ்ட்டை பாருங்க

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தன்னுடைய படத்திற்காக தேசிய விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார். இவரும் புகைப்பழக்கத்திற்கு முதலில் அடிமையாகி இருந்தார். பின்னர் படிப்படியாக அதை குறைத்தார். ஒரு முறை இதுகுறித்து அவர், "புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியே வருவது மிகவும் கடினமான ஒன்று தான். அதை யாரும் புரிந்து கொள்ளமுடியாது. எனினும் அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்று" எனத் தெரிவித்திருந்தார். 

”இவரின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்” - ரசிகர்களிடம் நடிகை சுனைனா வேண்டுகோள்

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget