Hashtag Bigil: ட்விட்டரில் ட்ரெண்டாகும் பிகில்.. ஹேஷ்டேக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிகில் திரைப்படம் 4வது முறையாக ஒளிபரப்பான போது 1.2 கோடி பார்வையாளர்கள் சராசரியாக இதனை பார்வையிட்டுள்ளது தெரியவந்துள்ளது...
நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லி கம்பினேஷனில் வெளிவந்த திரைப்படம் பிகில். அண்மையில் இத்திரைப்படம் சன் டிவியில் கடந்த மே 9-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. அப்போது 1.2 கோடி பார்வையாளர்களை பிகில் திரைப்படம் கவர்ந்துள்ளதாக BARC நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..
BARC என்னும் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் போது - நிமிடத்திற்கு எத்தனை பார்வையாளர்கள் அதனை சராசரியாக பார்வையிடுகிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை வழங்கும். அதன் அடிப்படையில், கடந்த மே 9-ஆம் தேதி சன் டிவியில் பிகில் திரைப்படம் 4வது முறையாக ஒளிபரப்பான போது 1.2 கோடி பார்வையாளர்கள் சராசரியாக இதனை பார்வையிட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பிகில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட போது சராசரியாக பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை...
முதல் முறை - 16473000
2வது முறை - 16936000
3வது முறை - 10733000
தற்போது 4வது முறை - 12026000
இதனை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அதன் காரணமாக #பிகில் என்னும் ஹாஷ்டாக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது...
#Bigil 4th telecast gains a Massive 12,026,000 Impressions.
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) May 20, 2021
BIGIL still holds the Record of 16.9M Impressions on its Repeat Telecast! It's the Highest Ever Impression for a Repeat Telecast in TAMIL & Its also Higher than @BigilTamilMovie Premiere (16.47M). @actorvijay #Master pic.twitter.com/eCJD7NMSjI
#Bigil 4th time telecast gets a massive 1,20,26,000 BARC impressions..💜
— தளபதி 𝗥𝗶𝘆𝗮 (@itsme_Riyasha) May 20, 2021
TRP king💥💥#Master @actorvijay #Thalapathy65 pic.twitter.com/vyz0aSMI5B
4th Telecast (BARC IMPRESSION)#Bigil - 12M+ 🔥#Viswasam - 11M
— Thalapathy Vijay Vibes (@VibesVijay) May 20, 2021
Irundha Orae oru Movie-um 🤫 #Master pic.twitter.com/FKwF5aREwD