Jailer Vs Ponniyin selvan: பொன்னியின் செல்வன் வசூலை துவம்சம் செய்யுமா ஜெயிலர்? நாளுக்கு நாள் எகிறும் வசூல்..!
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை செய்து வரும் ஜெயிலர் படம் வெளியான ஆறே நாட்களில் விக்ரம் படத்தில் வசூலை முறியடித்து விட்டதாகவும் விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலையும் முறியடிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
![Jailer Vs Ponniyin selvan: பொன்னியின் செல்வன் வசூலை துவம்சம் செய்யுமா ஜெயிலர்? நாளுக்கு நாள் எகிறும் வசூல்..! Will Jailer movie overtake the box office collection of Ponniyin selvan Jailer Vs Ponniyin selvan: பொன்னியின் செல்வன் வசூலை துவம்சம் செய்யுமா ஜெயிலர்? நாளுக்கு நாள் எகிறும் வசூல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/95a4e70c1a21d67c4cf5814d2b9794f51692195214204224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
வசூல் வேட்டையில் ஜெயிலர்:
நெல்சனின் புதிய முயற்சியில் உருவான இப்படம் ரஜினிகாந்துக்கு ஒரு சிறந்த கம் பேக் படமாக அமைந்துள்ளது. அதே போல இதற்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதனால் அடுத்த படமான ஜெயிலர் படத்தை ஒரு வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன் லால், தமன்னா மற்றும் பலர் நடித்து இருந்தனர். ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள இப்படம் வெளியான முதல் நாள் முதல் இன்று வரை வெற்றி நடை போட்டு வருகிறது. நடிகர் ரஜினியின் பழைய வெறித்தனமான மாஸ் பர்பாமன்ஸ் பார்க்க பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர். அது ஜெயிலர் படம் மூலம் பூர்த்தி அடைந்துள்ளதால் ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையும் அதிக அளவில் உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வேட்டை :
எதிர்பார்த்தது போலவே ஜெயிலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஆறே நாட்களில் உலகெங்கிலும் சுமார் 416 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்தில் முதல் நாள் வசூல் மட்டுமே 95.78 கோடி ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
விக்ரம் சாதனை முறியடித்தது :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படமான 'விக்ரம்' படம் ஒட்டுமொத்தமாக 410 கோடி வசூல் செய்து இருந்தது. 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றியை முறியடிக்கும் வகையில் ஜெயிலர் திரைப்படம் ஆறே நாட்களில் 416 கோடி வசூலித்து 'விக்ரம்' சாதனையை முறியடித்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன. இந்த வெற்றியை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பொன்னியின் செல்வனை வீழ்த்துமா?
அதே போல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வரலாற்று திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது. உலகளவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை தக்கவைத்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் பட்டத்தை ஜெயிலர் துவம்சம் செய்து முதல் இடத்தை கைப்பற்றுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முந்தைய ரெகார்ட் :
இதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் நடித்த 2.0, கபாலி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான ஆறே நாட்களில் 400 கோடியை எட்டியது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட படங்கள் இணைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து திரைப்படங்களின் சாதனையையும் முறியடித்து உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற இடத்தை 'ஜெயிலர்' பிடிக்குமா? என்பதை அடுத்தடுத்த நாட்களில் நாம் அறியலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)