கைத்தட்டும் ரசிகர்களுக்காக ஏதாவது செய்யணும்.. அதனாலதான் இப்படி.. - ஓப்பனாக பேசிய விக்ரம்
தியேட்டரில் நமக்காக கைத்தட்டும் ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பதாக கூறும் சியான் விக்ரம் ..
சீயான் விக்ரம் :
கமல்ஹாசனுக்கு பிறகு தன்னை வருத்திக்கொண்டு உழைக்கும் நடிகன் என்றால் அது விக்ரம்தான். டப்பிங் கலைஞராக தனது திரைப்பயணத்தை மெல்ல மெல்ல செதுக்கிய சியானுக்கு சினிமா என்பதை ஒரு அடங்காத தாகம். ஒரு கலைஞன் இவ்வளவு ஆழமாக சினிமாவை நேசிக்க முடியுமா என காட்டிக்கொண்டிருப்பவர். வாழும் லெஜெண்ட் என கொண்டாடப்படும் சியான் விக்ரம் சந்திக்காத தோல்விகளே இல்லை. பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம்தான் சியான் என்னும் அடைமொழியையும் , கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.
View this post on Instagram
படம் தாமதமாவதற்கு காரணம் :
விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதில்லை. ஒரு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதான் அடுத்த படம் வெளியாகும். இதற்கான காரணம் குறித்து விக்ரமே விளக்கியிருந்தார். அதாவது தான் ஒரு படம் நடித்து அதன் புரமோஷன் வேலைகளை முடித்தவுடனே அடுத்த படத்திற்கான கதை கேட்க தொடங்கிவிடுவேன் என்றும் அந்த கதையில் சில முடிச்சுகள் இருந்தால் அதற்கான டெவலப்மெண்ட் வேலைகள் அதிகமாக இருக்கும் , சில சமயங்களில் அந்த படத்திற்காக தான் தயாராக வேண்டியிருக்கும் அதனால்தான் அடுத்த படம் வெளியாவதற்கு ஒரு வருடம் ஆகிவிடுகிறது என தெரிவித்தார். தியேட்டரில் நமக்காக கைத்தட்டும் ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பதாக கூறும் சியான் விக்ரம் , ஷூட்டிங் சென்றால் அங்கு மொபைலில் அரட்டை அடிப்பது போன்ற வேலைகளை செய்ய மாட்டாராம் . அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போவேன் என்கிறார்.
View this post on Instagram
அப்பாவும் மகனும்
அச்சு அசல் விக்ரமை போலவே இருப்பவர் அவரது மகன் துருவ். அப்பா மகன் கெமிஸ்ட்ரிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் விக்ரமும் துருவும்தான் .சமீபத்தில் இவர்களது காம்போவில் வெளியான மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் இந்த காம்போவிற்காகவே படத்தை எதிர்பார்த்தவர்கள் ஏராளாம் . விக்ரமிற்கு தற்போது 56 வயதாகிறது . ஆனாலும் அத்தனை சுறுசுறுப்பானவர் . இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆக்டிவானவர் .காரணம் உடலுக்குதான் வயதாகிறதே தவிர மனதிற்கு அல்ல! நீங்கள் உங்களை வலிமையாக நினைத்தால் வயதெல்லாம் தடை இல்லை என்கிறார் விக்ரம்.