ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டை பெற்ற தஞ்சாவூர் பொண்ணு.. யார் இந்த ஐக்கி பெர்ரி?
ராப் பாடகி ஐக்கி பெர்ரி பாடிய பம் பம் பாடலின் வரியை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் பாடகி ஐக்கி பெர்ரி. இவர் நெக்சா மியூசிக் என்ற இசை நிகழ்ச்சியில் தனது குழுவினருடன் கலந்துகொண்டார். இதில், பம் பம் என்ற பாடலை பாடி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் ஐக்கி பெர்ரி பாடலை பாராட்டினார். மேலும், அந்த பாடல் உருவான விதம் குறித்தும் ரஹ்மான் கேட்டறிந்தார். ஐக்கி பெரி ஏ.ஆர்.ரஹ்மானுடன் அமர்ந்து பேசும் வீடியோ சமூகவைலதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது யார் இந்த ஐக்கி பெரி என்பது தான் தமிழ் ரசிகர்களின் கேள்வியாக மாறியிருக்கிறது.
யார் இந்த ஐக்கி பெர்ரி?
பார்ப்பதற்கு வெளிநாட்டு ஃபாரின் ரிட்டர்ன் பெண் போன்று இருந்தாலும், ஐக்கி பெரி தமிழ்நாட்டை சேர்ந்த தஞ்சாவூர் பெண் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தஞ்சாவூரில் தான் தனது குழந்தை பருவத்தை கழித்துள்ளார். மருத்துவரான இவர் ராப் பாடல் மீது அதீத ஆர்வம் கொண்டதால் தனது நடை, உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார். இவருக்கு அப்பா - அம்மா ஐக்கியா என ஐக்கித்தின் பொருளை உணர்த்தும் வகையில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதனை இவர் மாடலாக ஐக்கி பெர்ரி என மாற்றிக்கொண்டார். மருத்துவராக இருந்தாலும், ராப் இசை கலைஞராக வேண்டும் என்கிற தனது முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.
View this post on Instagram
பிரபல பின்னணி பாடகி ரம்யா என்.எஸ்.கே தான் இவருக்கு இசை குரு. மேலும், ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியிலும் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். 2016இல் இவரது முதல் இசை ஆல்பமானது இதிஹாசம் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், 2018ஆம் ஆண்டு காதலி என்ற குறும்படத்திலும் ஐக்கி பெர்ரி நடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது இவர் பாடியிருக்கும் பம் பம் பாடல் கவனத்தை பெற்றிருக்கிறது. இன்னும் அவர் பல உயரங்களை தொட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நம்ம தமிழ் பொண்ணு உலகத்தை கலக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.






















