மேலும் அறிய

Roja | கிஸ்ஸிங் சீனா? அய்யோ வேண்டாம்னு அழுதேன்.. ரியாலிட்டி ஷோவில் சொன்னது யார் தெரியுமா?

ரொமான்ஸ்களுக்குக் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாத ரோஜா படத்துல ரொமான்ஸ் காட்சிகளே எனக்கு வேண்டாம் என அரவிந்த் சாமி கூறினார் என்றார் நம்ப முடியுமா? யார் சொன்னார்கள் என்கிறீர்களா? அவரே சொன்னார்

ரோஜா படத்தில் ரொமான்ஸ் காட்சிகளும் நிறையவே பேசப்பட்டன. ஆனால் நான் முத்தக்காட்சிகளில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று சூட்டிங் செட்டில் அழுது அடம்பிடித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. ”புது வெள்ளை மழை, காதல் ரோஜாவே, சின்ன சின்ன ஆசை என்ற பாடல்கள் 90ஸ்களுக்கு மட்டுமில்லை இப்போதும் யார் கேட்டாலும் மனம் மயங்காதவர்கள் இருக்க முடியாது. இப்பாடல்கள் மட்டும் இல்லை, பாடல்கள் அனைத்தும் இ்டம்பெற்றிருக்கும் ரோஜா படமும் தான். மணிரத்னம் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அரவிந்த் சாமி- மதுபாலா ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்படத்தில் இவர்கள் இருவரிடையேயான காதல் காட்சிகளை ஈடுகொடுக்கும் அளவிற்கு எந்தவொரு படமும் தமிழில் வெளிவரவில்லை என்று தான் கூறவேண்டும். அந்தளவிற்கு  இருவரிடையேயான கெமிஸ்டரி மாஸ் காட்டியிருக்கும்.  ஒருபுறம் காதல், ரொமான்ஸ் என்ற நிலையில், மற்றொரு புறம் தேசபக்தியைக்கொண்டு கதைக்களம் நகர்ந்திருக்கும். இதன் காரணமாகவே இப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருந்தது.

Roja | கிஸ்ஸிங் சீனா? அய்யோ வேண்டாம்னு அழுதேன்.. ரியாலிட்டி ஷோவில் சொன்னது யார் தெரியுமா?

குறிப்பாக ரோஜா படத்தில் காதல் காட்சிகள்தான் அதிகளவில் இடம் பெற்றிருக்கும். 90-ஸ் கிட்ஸ்கள் சில்லறைகளை சிதறவிட்ட காதல் காட்சிகள் அவை. அதிலும் அரவிந்த் சாமியின்  ரசிகைகள் இப்படத்தினை தலையில் வைத்துக்கொண்டாடினார்கள். ஆனால் இப்படத்தின் சூட்டிங்கின் போது நடந்த கதையைக் கேட்டால் ரோஜா பட நாயகன் அரவிந்த் சாமியா? இப்படி கூறினார் என்று வியப்பாகவும் நகைப்பாகவும் தான் உள்ளது. அதிலும் அவரே ஒரு ரியாலிட்டி ஷோவில் தெரிவித்தது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. அப்படி என்னதான் அவர் சூட்டிங்கில் செய்தார்?

சூப்பர் டான்சர் சீசன் 4  ரியால்டி ஷோ ஒன்றில் மதுபாலா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் வீடியோவின் வாயிலாக கலந்துக்கொண்ட அரவிந்த் சாமி, மதுபாலாவுடன் நடித்த ரோஜா படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். நமக்கெல்லாம் தெரிந்த ரோஜா படத்தில்  ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும்  மிகவும் எதார்த்தமாகத்தான் அமைந்திருக்கும். ஆனால் “இந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனவும், எனக்கு வெட்கமாக உள்ளதாக சூட்டிங் செட்டில் அடம்பிடித்துள்ளார் அரவிந்த்சாமி. ரோஜா படத்தின்போது அவருக்கு 21 வயது என்பதால் மதுபாலாவுடனான முத்தக்காட்சிகளை நடிக்க இயக்குநர் மணிரத்னம் தெரிவித்தபோது நடிக்க மறுத்து அழுதுவிட்டாராம் நம்ம அரவிந்த் சாமி. எனக்கு வெட்கமாக உள்ளது... என்னால் முடியாது என மறுத்த நிலையில்தான் இயக்குநரும் மதுபாலாவும் அவரைத்தேற்றி இப்படத்தில் நடிக்க வைத்ததாக அவரே தெரிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரோஜா தமிழில் மட்டுமில்லை ஹிந்தியிலும் வெளியாகி ரசிகர்களைக் கொள்ளைக்கொண்டது.

Roja | கிஸ்ஸிங் சீனா? அய்யோ வேண்டாம்னு அழுதேன்.. ரியாலிட்டி ஷோவில் சொன்னது யார் தெரியுமா?

நடிக்க அழுதது அரவிந்த் சாமியா? என ஷோவில் எல்லாரும் ஷாக் ஆனார்கள். ரோஜா படத்தில் அனைவரையும் தன்னுடைய காதல் காட்சிகளில் ஈர்த்திருந்தார் என இவரது ரசிகர்கள் போஸ்ட் செய்துவருகிறார்கள். மேலும் பலர் கேலி செய்து மீம்ஸும் போட்டு பல கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அரவிந்த் சாமி தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக, கங்கனா ரனாவத்துடன் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V. K. Pandian:  Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
Embed widget