மேலும் அறிய

Sivakumar : இனி நான் மேக்கப் போட்டு நடிக்க மாட்டேன்! மனம் நொந்து சினிமாவில் இருந்து விலகிய சிவகுமார்...

Sivakumar : பழம்பெரும் நடிகர் சிவகுமார் சினிமாவில் இருந்து விலக காரணமாக அமைந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா?

 

சினிமாவில் கிசுகிசு வருவது எல்லாம் சர்வ சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத ஒரு கண்ணியமான மனிதர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். ராஜராஜ சோழன், பட்டிக்காட்டு ராஜா என பல படங்களில் நடித்து இருந்தாலும் இசைஞானி இளையராஜாSivakumar : இனி நான் மேக்கப் போட்டு நடிக்க மாட்டேன்! மனம் நொந்து சினிமாவில் இருந்து விலகிய சிவகுமார்... அறிமுகமான அன்னக்கிளி படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஏராளமான படங்களில் நாயகனாகவும் துணை நடிகராகவும் சிறப்பாக நடித்து வந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவரின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை  சந்தித்ததால் அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை ராதிகாவின் மிகவும் பிரபலமான சீரியலான 'சித்தி' சீரியலில் நடித்ததன் மூலம் மீண்டும் பிரபலமானார். அவரின் மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அற்புதமான நடிகராக திகழ்ந்த சிவகுமார் சினிமாவில் இருந்து விலக அவர் எதிர்கொண்ட மனக்கசப்பான அனுபவம் தான் காரணம் என கூறப்படுகிறது.  

'சித்தி' சீரியலில் நடிகர் சிவகுமார் காட்சி ஒன்றுக்காக பிராக்டிஸ் செய்து கொண்டு இருந்துள்ளார். அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 'பாசமலர்' படத்தில் சிவாஜி கணேசன் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தது போல தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் தூங்காமல் பிராக்டிஸ் செய்து வந்துள்ளார். அவர் கஷ்டப்பட்டு நடித்து கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த ஒரு கோ-ஆர்ட்டிஸ்ட் போனில் தனது ஆண் நண்பருடன் பேசி சிரித்து கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்து கடுப்பான சிவகுமார் "நான் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்குறேன். அதை கொஞ்சம் கூட மதிக்காமல் சிரிக்கிறாயே?" என கேட்டதற்கு அந்த பெண் "ஏன் சார் சும்மா கத்துறீங்க? எப்படியும் டப்பிங்கில் தானே பேசப்போறீங்க?" என அலட்சியமாக பதிலளிக்க அதை கேட்டு மனம் நொந்து போனார் நடிகர் சிவகுமார். 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் போது அதை பார்த்த அருகில் இருந்த எல்லோரும் அழுதுள்ளனர். மெய்மறந்து போன இயக்குநர் கூட கட் சொல்ல மறந்து விட்டாராம். அந்த அளவுக்கு அவருடைய நடிப்புக்கு மரியாதை கொடுத்தார்கள். ஆனால் அந்த மரியாதை இப்போ இல்லை. என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டு இனி நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்து அன்று முதல் மேக்கப் போட மாட்டேன் என நடிப்பையே நிறுத்தி கொண்டாராம். அன்றில் இருந்து இன்று வரை அவர் எந்த ஒரு படத்திலோ அல்லது சீரியலிலோ நடிக்கவில்லை. அஜித்- ஜோதிகா நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' அவர் கடைசியாக நடித்த திரைப்படம். 

ஆனால் இன்றும் சிறப்பான சொற்பொழிவாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget