மேலும் அறிய

பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு இயக்குநர் சுதா கொங்காராவிற்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

பராசக்தி திரைப்படத்தில் 8 கோடி சம்பள பாக்கி இருப்பதாக இயக்குநர் சுதா கொங்காரா டான் பிக்ச்சர்ஸ் மேல் வழக்கு தொடுத்திருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பள பாக்கியே 8 கோடி என்றால் சுதா கொங்காராவுக்கு இந்த படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த  நிலையில் பராசக்தி படத்திற்காக சுதா கொங்காராவிற்கு மொத்தம் 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 

துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  இயக்குநராக அறிமுகமானார் சுதா கொங்காரா. முதல் படம் தோல்வியை சந்தித்தாலும்  இறுதி சுற்று , சூரரைப் போற்று என அடுத்தடுத்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக இடம்பிடித்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறை மையமாக வைத்து இவர் இயக்கிய படம் பராசக்தி. சிவகார்த்திகேயன் , அதர்வா , ரவி மோகன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்தார்

வசூலில் தோல்வி 

சுமார் 150 கோடி பட்ஜெட்டில் பராசக்தி திரைப்படம் உருவாகி கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படமும் வெளியாக இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தடைபட்டது. இதனால் போட்டியே இல்லாமல் பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அப்படத்திற்கு திறந்திருந்தன. ஆனால் படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெறவே வசூலில் பராசக்தி தோல்வியை தழுவியது. உலகளவில் இப்படம் ரூ84.8 கோடி மட்டுமே வசூல் செய்தது. இப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு படத்தின் லாபத்தின் பங்கு தருவதாகவே முதலில் சம்பளம் பேசப்பட்டது.

சுதா கொங்காராவுக்கு எவ்வளவு சம்பளம் 

பராசக்தி திரைப்படத்திற்காக தனக்கு ₹15 கோடி சம்பளம் மற்றும் 15% லாபப் பங்கு தருவதாக உறுதியளிக்கப்பட்டதாக சுதா கொங்காரா தெரிவித்துள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சர்ஸ்'  இதுவரை ₹6.71 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள ₹8.39 கோடியைப் பெற்றுத் தருமாறு கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தயாரிப்பு நிறுவனத்திடம் பிணையமாகப் பெறக்கூடிய உறுதியான சொத்துகள் ஏதுமில்லாததால், ஜூலை 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, முழு சம்பளமும் வழங்கப்பட்ட பின்னரே அறிவுசார் சொத்துரிமை மற்றும் அது சார்ந்த பிற உரிமைகள் மாற்றப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை, பிப்ரவரி 8 முதல் 12% வட்டியுடன் வழங்குமாறு அவர் கோரியுள்ளார். மேலும், அப்படத்தின் OTT மற்றும் செயற்கைக்கோள் வெளியீட்டைத் தடை செய்யுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், 'டான் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்குச் சேர வேண்டிய தொகையை 'Zee5' நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்துமாறும், வழக்கு முடியும் வரை அத்தொகையை நீதிமன்றமே பெற்று வைத்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget