Sivakarthikeyan: இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ன? குடும்ப விஷயத்தில் தலையீடு..! விளாசும் நெட்டிசன்கள்
Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு பெரும் துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி. இமான் கூறிய நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் இடையேயான பிரச்னை தொடர்பாக யூடியூபர் பிஸ்மி பேசிய பழைய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துரோகம் செய்தாரா சிவகார்த்திகேயன்?
பேட்டி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் டி. இமானிடம், நடிகர் சிவாகார்த்திகேயனுடன் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சேர்ந்து பயணிப்பது கடினம். தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல இயலாது. சில விஷயங்கள் வேண்டாம் என்று முடிவு செய்கிறோம். மிகுந்த யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய பங்கிற்கு அவரிடம் இது பற்றி நான் பேசிவிட்டேன். சில விஷயங்கள நான் மூடி மறைக்கிறேன் என்றால், அதற்கு குழந்தைகளின் எதிர்காலம் தான் காரணம்” என இமான் பேசியிருந்தார்.
குவியும் கண்டனங்கள்:
இந்த பேட்டி வெளியானது முதலே நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக டி. இமான் இசையமைத்த மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் தான் சிவாகார்த்கேயனின் அடையாளம். அந்த படங்கள் மூலம் தான் சிவகார்த்திகேயன் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்ததாகவும், அவரது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இமானுக்கு எப்படி துரோகம் செய்ய முடிந்தது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இமானின் குடும்ப விவகாரத்தில் சிவகார்த்திகேயன் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் இமான் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறுஎதுவுமில்லை
— Valaipechu J Bismi (@jbismi_offl) October 17, 2023
வைரலாகும் வலைப்பேச்சு வீடியோ:
இதனிடையே, மூத்த பத்திரிகையாளரும், யூடியூபருமான பிஸ்மி சில மாதங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இடையேயான மோதல் தொடர்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், இமானுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவிலான ஒரு மோசமான துரோகத்தை சிவாகார்த்திகேயன் செய்துள்ளார். அதனால், சிவகார்த்திகேயன் உடன் இனி சேர்ந்து பணியாற்றிவிடவே கூடாது என இமான் முடிவு செய்துள்ளார் “ என பிஸ்மி தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவையும் தற்போது பலரும் பகிர்ந்து, சிவாகார்த்திகேயனை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பிஸ்மி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், ”உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறுஎதுவுமில்லை” என குறிப்பிட்டுள்ளார். அதில் யார் பெயரையும் பிஸ்மி குறிப்பிடாவிட்டாலும், அவர் சிவகார்த்திகேயனை தான் மறைமுகமாக விமர்சிப்பதாக பிஸ்மியின் அந்த டிவீட்டை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
முடிவுக்கு வருமா?
தேசிய விருது வென்ற இசையமைப்பாளரான டி. இமான் மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் இடையேயான இந்த பிரச்னை தற்போது கோலிவுட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுபற்றி தெளிவான புரிதல் இல்லாத ரசிகர்களும் இருவரின் தனிப்பட்ட விவரங்களை கொண்டு மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து பேசுபொருளாகி வரும் இந்த விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன், இமான் ஆகிய இருதரப்புக்கு மட்டுமே தெரியும். இருதரப்பில் இருந்தும் ஏதேனும் விளக்கம் வெளியானால் மட்டுமே இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.