Watch Video: காத்துவாக்குல பீச்சுல சுத்தும் விஜே மகேஸ்வரி... லைக்ஸ்களை அள்ளும் க்யூட் வீடியோ...
விஜே, நடிகர் என பன்முக தன்மை கொண்ட மகேஸ்வரி, அடுத்து ஆடை வடிவமைப்பாளராகாவும், ஸ்டைலிஸ்ட்டாகவும் களமிறங்கி இருக்கிறார்.
![Watch Video: காத்துவாக்குல பீச்சுல சுத்தும் விஜே மகேஸ்வரி... லைக்ஸ்களை அள்ளும் க்யூட் வீடியோ... Watch Video: Vj maheshwari shares a reel in instagram shot on the beach on her birthday Watch Video: காத்துவாக்குல பீச்சுல சுத்தும் விஜே மகேஸ்வரி... லைக்ஸ்களை அள்ளும் க்யூட் வீடியோ...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/772f26996a63d8485ba2904482047d3b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல இசை சேனலில் தொகுப்பாளராக கரியரை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி. நேற்று (பிப்ரவரி 17-ம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். டிரெண்டிங்கில் இருக்கும் ‘முதலும் நீ முடிவும் நீ’ பாடலுக்கு கடற்கரையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ ரீல்ஸ் அதிக லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
பிரபல வீஜேவாக மக்கள் மத்தியில் பிரபலமான மகேஸ்வரி, ஹிட்டான சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தொகுத்து வழங்குவது மட்டுமின்றி, சீரியல், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை திருமணமாகி அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால், சில தவிர்க்க முடியாத பிரச்னை காரணமாக திருமண வாழ்கையில் இருந்து விலகி இருக்கிறார்.
வீடியோவை காண:
View this post on Instagram
இதனால், சிறிய இடைவெளியில் இருந்த அவர், மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கவனம் செலுத்தினார். இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் அவர், ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோ ரீல்ஸ்களை பதிவிடுவது வழக்கம். அவை ரசிகர் மத்தியில் அதிக லைக்ஸ்களை அள்ளும்.
View this post on Instagram
விஜே, நடிகர் என பன்முக தன்மை கொண்ட மகேஸ்வரி, அடுத்து ஆடை வடிவமைப்பாளராகாவும், ஸ்டைலிஸ்ட்டாகவும் களமிறங்கி இருக்கிறார். இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு இனிய வாழ்த்துகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)