(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: இறக்கையே குடை.. நிழலைக் காட்டி மீன்.. கெத்து வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் Black Heron
வித்தியாசமான மீன்பிடிக்கும் தன்மையை கொண்டிருக்கும் கருப்பு ஹெரான் ஒன்று மீன் பிடிக்கும் அற்புதமான விடியோ காட்சி வெளியாகி ட்விட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இயற்கை பல அற்புதங்களை தன்னுள் வைத்து இயங்கிக்கொண்டிருக்கும், அவை அவ்வப்போது மனிதர்களின் கண்ணுக்கு தெரிந்து அதிசயத்தில் ஆழ்த்தும். இயற்கை இயல்பாகவே சில அற்புதங்களை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கற்றுத்தந்த வைதிருக்கும். குறிப்பாக ஒவ்வொரு விளங்கும் வேட்டையாடும்போது பயன்படுத்தும் யுக்திகள் நம்மால் நம்ப முடியாத அளவு இருக்கும். அப்படி ஒரு விஷயமாக கேனோபி ஃபீடிங் (விதான ஊட்டல்) முறைப்படி மீன் பிடிக்கும் கருப்பு ஹெரான்கள் மிகவும் ஆச்சர்யம் அளிக்க கூடியவை. அந்த முறையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் ஒரு கருப்பு ஹெரானின் விடியோ வைரல் ஆகி உள்ளது.
விடியோவில் காணப்படும் கருப்பு ஹெரான் தண்ணீரில் நடந்து வந்து இரையை பிடிக்கும் முன்பு தன் சிறகுகளால் குடை போன்ற வடிவத்தை உருவாக்கி தலையாய நீருக்குள் விட்டு மீனை பிடித்து உண்கிறது. அது போல இரண்டு முறை செய்கிறது. ஹெரான்கள் ஏன் றெக்கையை மடித்து குடை போல ஆக்கி பின்னர் மீனை பிடிக்கின்றன என்றால், தண்ணீருக்குள் இருக்கும் மீன்கள் நிழல் இருக்கும் பகுதிக்கு அதிகம் வருமாம். அவை நிழலை கண்டால் சிறிது நேரம் நின்று செல்லுமாம். அதற்காக நிழலை உருவாக்கி இரையை தன் வசமாக்குகின்றன ஹெரான்கள். அதுபோலவே றெக்கையை மடக்கி மீன் பிடிக்கும் விடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Who & how they were taught this survival skill??
— Susanta Nanda IFS (@susantananda3) November 21, 2021
Black heron hunts with a method, commonly known as canopy feeding, using its wings like an umbrella to create shade that attracts fish. Amazing. Via Massimo.
🎬: @leedsbirder pic.twitter.com/GzEiK3Yi3F
அந்த வீடியோவை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது, "இந்த உயிரவாழும் திறனை யார் இவர்களுக்கு சொல்லி தந்திருப்பார்கள், எப்படி சொல்லித் தந்திருப்பார்கள்? கருப்பு ஹெரான்கள் பொதுவாக மீன் பிடிக்கும் பாணியை கேனோபி ஃபீடிங் என்று கூறுவார்கள், தன் றெக்கையால் குடை போல் விரித்து நிழல் உருவாக்கி மீனை ஈர்க்கும் முறை, அருமை." என்று எழுதி அந்த வீடியோவை எடுத்தவரை டேக் செய்திருக்கிறார். இந்த வீடொயோவை எடுத்தவரின் ட்விட்டர் கணக்கு பெயர் லீட்ஸ்பேர்டர். கேனோபி ஃபீடிங் (விதான ஊட்டுதல்) என்னும் முறையை பயன்படுத்தி மீனை பிடிக்கும் கருப்பு ஹெரான்கள் தென் ஆப்பிரிக்கா, செனகல், சூடான், மடகாஸ்கர், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.