Watch Video: ஹேப்பி பர்த்டே ஷாருக்கான்..பாலிவுட் பாட்ஷாவின் பிறந்தநாளை சிறப்பித்த புர்ஜ் கலிஃபா..வைரல் வீடியோ!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பாலிவுட்டின் பாட்ஷா
பாலிவுட் நட்சத்திரங்களில் முத்திரைப் பதித்த நாயகர்களுள் ஒருவராக கருதப்படுபவர் ஷாருக்கான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், ஆரம்பத்தில் பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்தார். இவர் நடித்த முதல் திரைப்படம், 1992 ஆம் அண்டில் வெளிவந்த தீவானா. காதல் வழியும் விழிகளுடனும், இளமை துடிப்புடனும் இருந்த இவரை, பாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கு பிடித்துப் போனது. ஆனால், அதற்கு அடுத்த படத்தில் அப்படியே எதிர்மாறாக, கொடூர வில்லனாக நடித்திருந்தார்.
இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்த படம் தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இப்படத்தில் கஜோலுக்கு க்ளைமேக்ஸில் இவர் கை கொடுக்கும் சீனிற்காகவே பல பேர் தியேட்டருக்கு படையெடுத்தனர். பல பேரின் அழுகைக்கு காரணமாக அமைந்த இப்படம், 100 நாட்களைக் கடந்து வசூலிலும் விமர்சனத்திலும் சக்கை போடு போட்டது. இப்படத்தையடுத்து, ஷாருக்கானிற்கு தொட்டதெல்லாம் துலங்கியது. இதனால், ஷாருகானை சிலர் பாலிவுட்டின் பாட்ஷா என்றே அழைத்தனர்
பதான் டீசர்:
ஷாருக்கான், நடித்திருந்த தில் சே, பர்தேஸ,யெஸ் பாஸ், அஞ்சம், தேவ்தாஸ், ரா1 ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தன. அந்த ஹிட்கள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்த்ரா படத்தில் கூட, கெஸ்ட் ரோலில் வந்தாலும், ரசிகர்களின் விசிலை பெற்றார் ஷாருக்கான். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பதான் டீசர் வெளியானது. ஷாருக்கானின் ப்ளாக் பஸ்டர் ஹிட் வரிசையில், இப்படமும் இடம்பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புர்ஜ் கலிஃபாவில் வாழ்த்து!
துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரத்தில், முக்கிய நாட்களன்று வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், ஷாருக்கானின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் வகையில், அவருக்கு அந்த கோபுரத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஹேப்பி பர்த்டே பதான்” என்ற வாசகம் அடங்கிய அந்த வீடியோ,தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ரசிகர்களுக்காக ட்வீட் செய்த ஷாருகான்
ஷாருக்கின் ரசிகர்கள், அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், நேற்று காலையிலேயே அவரது வீட்டின் முன் திரண்டனர். இவர்களுக்காக, நடிகர் ஷாருகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் நாளை சிறப்பாக மாற்றியதற்கு மிக்க நன்றி, உங்களது அன்பினை கடல் போல பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
The sea of love as I see it. Thank u all for being there and making this day ever so special. Gratitude…and only Love to you all. pic.twitter.com/IHbt4oOfYc
— Shah Rukh Khan (@iamsrk) November 3, 2022
ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு மாதுரி தீக்ஷித், ஷில்பா ஷெட்டி, க்ரித்தி சனோன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.