கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி, மற்றும் சமைத்த மான் இறைச்சி ஆகியவற்றை கொடைக்கானல் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரபலமான சுற்றுலா தலமாக கொடைக்கானல் விளங்குகிறது. கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
IND vs SA T20 Final LIVE Score: ரோஹித் படையுடன் மோதும் மார்க்ரம் படை! சாம்பியன் பட்டம் யாருக்கு?
மான் வேட்டை:
இந்த பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் அழகிய மலைமேடுகள் என பார்ப்பவைகளை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. கொடைக்கானல் பெரும்பாலான இடங்கள் வனப் பகுதியாகவே இருந்து வருகிறது. இங்கு மான், காட்டெருமை, சிறுத்தை, புலி ,உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் இருந்து வருகிறது . தொடர்ந்து இந்த வன விலங்குகள் நகர் பகுதி மட்டுமின்றி நகர் பகுதியில் ஒட்டி உள்ள இடங்களிலும் உலா வருகிறது.
கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த சிலர் மான் வேட்டையாடி அதனை சமைப்பதற்காக தயார் செய்து வந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த புகைப்படம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி, மற்றும் சமைத்த மான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
6 பேர் கைது:
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார் , ராஜேஷ் கண்ணன் , அஜித் , சிவராமன் , ராமகிருஷ்ணன் , பிரவீன் ஆகிய ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் . மேலும் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் பல்வேறு வேட்டை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை தீவிர படுத்தி உள்ளனர்.