Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Presenting the much-awaited first look of #VidaaMuyarchi 🤩 Brace yourselves for a gripping tale where perseverance meets grit. 🔥🎬#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/ABtDSoM46S
— Lyca Productions (@LycaProductions) June 30, 2024
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்
துணிவு படத்தைப் போலவே விடாமுயற்சி படமும் ஹைஸ்ட் படமாக இருக்கும் என்பதை இந்த போஸ்டரில் தெரியவந்துள்ளது. மகிழ் திருமேணியின் முந்தைய படங்கள் விறுவிறுப்பான திரைக்கதை , திடீர் திருப்பங்களை பொது அம்சமாக கொண்டிருப்பவை அதேபோல் இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களை இந்த போஸ்டர் எந்த அளவிற்கு திருப்திபடுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விடாமுயற்சி இதுவரை
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்துது இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் டைட்டிலைத் தொடர்ந்து அடுத்தகட்ட அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்தார்கள். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்றது. இதன் பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.