மேலும் அறிய

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

”முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் தவறில்லை. துபாய், சிங்கப்பூர், போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது”

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜகவின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மதுபானங்கள் தரம்:

அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் மதுபானங்கள் தரமானதாக இல்லை என மூத்த அமைச்சரே சட்டமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். அரசு வேலை செய்யவில்லை, அரசு வேலை தவறாக செய்கிறது. ஈஷா விவகாரத்தை பொறுத்தவரை, வனத்துறை அமைச்சர் 3 ஆண்டுகள் ஆகியும் கண்டு பிடிக்கவில்லை என சொல்லும் போது, அமைச்சர் துரைமுருகன் 3 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேட்கிறார். ஈஷா தாங்கள் விதிமீறல் இல்லை என ஆதாரமாக சொல்லிவிட்டனர். ஏதாவது பிரச்னை என்பதால் ஈஷாவை வைத்துள்ளனர். திமுக அமைச்சர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சட்டமன்றத்தில் பார்க்க முடிகிறது.

நகைச்சுவையாக சொன்னாலும் உண்மை:

தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில்.கட்சியின் செயலாக்கத்தை ஆய்வு செய்து வருகிறோம். கோவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளார். நான் வேட்பாளராக பங்கேற்க வந்துள்ளேன். 6 சட்டமன்ற தொகுதியில் அனைத்து பொறுப்பாளர்களும் சந்தித்துள்ளோம். அடுத்த தேர்தலுக்கு தயாராவது, நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற நல்ல விஷயங்களை, தோல்வி கண்ட காரணத்தை ஆராய்ந்து செய்ய இந்த கூட்டம் நடத்த உள்ளோம்.

அடுத்து வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும். சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சி.ஏ.ஜி. அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அமைச்சர் துரைமுருகன் சொன்னது சில பேர் நகைச்சுவையாக சொன்னாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது சிலர் அதை சொன்னார்கள், தண்ணீர் போல் தான் இருப்பதாக சொன்னார்கள்.

துரைமுருகன் சொன்னது உண்மை

டாஸ்மாக் மதுவை விட போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்வதாக சொன்னார்கள். திமுகவை சார்ந்த எந்த புள்ளி டாஸ்மாக் உற்பத்தி செய்கிறார்கள், அதன் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் தமிழக அரசால் இன்னும் கொடுக்கவில்லை. கள்ளக்குறிச்சியில் ஓடிப்போய் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் போது, மக்களுக்காக போராடும் காவல் துறைக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் தவறில்லை. துபாய், சிங்கப்பூர், போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது. பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ தான். நீட் பொறுத்தவரை அடித்தட்டு மக்களுக்கு மருத்துவக்கல்லூரிக்கு செல்கின்றனர். ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்க மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்? தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் கதவை தட்ட மறுக்கின்றனர்.

ஸ்டாலின் நாடகம்:

ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றார். தென்னை மரம், பனை மரம் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்படும் கள்ளுவிற்கு ஆண்டாண்டு காலமாக கள்ளுக்கடை இருந்தது. அதை கொண்டு வர சொல்கிறோம். படிப்படையாக டாஸ்மாக் குறைக்க சொல்கிறோம். அரசு நடத்தாமல் தனியாரிடம் நடத்த கேட்கிறோம். குஜராத், கேரளா போன்று மது விற்பனை நடத்த சொல்கிறோம். சாராய விற்பனையில் திமுகவை சார்ந்திருக்கின்றனர். பழைய ஓய்வூதியம் திட்டம் யாருக்கும் தவறு செய்யும் திட்டமில்லை. காவல் துறை எப்போதும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

திமுகவிற்கு சேவை செய்யும் அடிமையான கட்சி என்றால் காங்கிரஸ் என்பது அதன் அகில இந்திய தலைமை அறிக்கை சொல்கிறது. 4 கட்சி மாறி 5 கட்சியில் உள்ளவர் செல்வ பெருந்தகை. அவருடைய அறிவு இவ்வளவு தான். தமிழகத்தில் தலைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது, பின் ஏன் கீழ் செல்கிறோம்? குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர். அனைத்து இடங்களிலும் தலைவர்கள் உள்ளனர். குறைவாக உள்ளனர். இன்னும் தலைவர்கள் வேண்டும் என்பது தான் விஜய் கருத்தாக இருக்க முடியும். மேகதாதுவில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முடியாது, சட்டம் உள்ளது, தொடர்ந்து அரசியலாக்கப் படுகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Embed widget