Watch Video : வாய் இங்க இருந்து மதுரை வரை இருக்கு... குறி ஜோசியக்காரருடன் குசும்பான வீடியோ பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!
’ரன் பேபி ரன்’ படம் எப்படி ஓடும் என்பது தொடங்கி, தன் ஆயுள் ரேகை, தன ரேகை என அனைத்தையும் ஜோசியர் பார்த்து சொல்லும் ஜாலியான வீடியோவைப் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரன் பேபி ரன்’.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண் குமார் மற்றும் வெங்கட் இப்படத்தை தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதி கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், குறி ஜோசியக்காரருடன் உரையாடலில் ஈடுபட்டு வித்தியாசமான ப்ரோமோஷன் வீடியோவைப் பகிர்ந்து ஆர்.கே.பாலாஜி ட்விட்டரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
அதன்படி ’ரன் பேபி ரன்’ படம் எப்படி ஓடும் என்பது தொடங்கி, தன் ஆயுள் ரேகை, தன ரேகை என அனைத்தையும் ஜோசியர் பார்த்து சொல்லும் ஜாலியான வீடியோவைப் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
மேலும் இந்த வீடியோவில், “வாய் இங்க இருந்து மதுரை வரை இருக்கு” , “சிரித்தே அனைவரையும் மயக்கிவிடுவீர்கள்” என்றெல்லாம் ஆர்.ஜே.பாலாஜியையே குறி பார்ப்பவர் கலாய்க்கும் வீடியோ குசும்பான ஆர்.ஜே.பாலாஜியின் பிற வீடியோக்கள் போலவே ரசிக்கப்பட்டு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
#RunBabyRun success party loading !!!😃
— RJ Balaji (@RJ_Balaji) January 27, 2023
Scientific proof attached .! 😎 pic.twitter.com/qbT6OqXzn2
முன்னதாக ரன் பேபி ரன் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசிய கருத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
”ரன் பேபி ரன் திரைப்படம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு த்ரில்லராக இருக்கும். மேலும் இது ஒரு லாபகரமான படமாக இருக்கும். இதை நான் ஏன் இப்பவே சொல்கிறேன் என்றால், இந்த காலக்கட்டத்தில் படம் எடுக்கிறவர்களை விட, இளைஞர்கள் வசூலில் அக்கறை காட்டுகிறார்கள். சில தினங்கள் முன் கூட முதல் நாள் வசூல், இரண்டாம் நாள் வசூல், யூட்யூப் வியூ, துபாய் பில்டிங்கில் டிரெய்லர் போட்டார்களா என யோசித்து இளைஞர்களோட ஆற்றல், நேரம் தான் வீணாகிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், கோடி கோடியாக சம்பளம் வாங்கி நடிக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் படம் நல்லா வர வேண்டும் என கவலைப்பட வேண்டுமே இளைஞர்கள் அல்ல என ஆர்.ஜே.பாலாஜி கூறினார். இளைஞர்கள் இதைப் பத்தி கவலைப்படுறது தேவையில்லாத விஷயம். எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை என அவர் தெரிவித்தார். கடந்த வாரம் கூட ஒரு உயிர் போச்சு. எனக்கு இளைஞர்கள் இப்படி பண்றது வருத்தமா இருக்குது.
சினிமாவுக்காக மக்கள் நிறைய கொடுக்குறாங்க. எங்களுக்கு இருக்க பெயர், புகழ் எல்லாம் நீங்க கொடுத்தது தான். படம் நல்லா இருந்தா சொல்லுங்க.. நல்லா இல்லாவிட்டாலும் சொல்லுங்க நாங்க திருத்திக்குறோம்” எனவும் ஆர்.ஜே.பாஜாஜி அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.