மேலும் அறிய

Barbie Movie: உலகளவில் பெயிண்ட் தட்டுபாட்டிற்கு பார்பி திரைப்படம் காரணமா? ... பதில் சொன்ன பெயிண்ட் நிறுவனம்

அளவிற்கதிகமான பெயிண்ட் பார்பி திரைப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதே சர்வதேச அளவில் நிலவி வரும் பிங் நிற பெயிண்ட் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ற குற்றம்சாட்டிற்கு பதிலளித்துள்ளது பிரபல பெயிண்ட் நிறுவனம்.

ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கெர்விக் இயக்கிவரும் திரைப்படம் பார்பி. தற்போது வினோதமான குற்றச்சாட்டு ஒன்று இந்தப் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. என்னக் குற்றச்சாட்டுத் தெரியுமா?

குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன்  கதாபாத்திரம் பார்பி. இதுகுறித்த   படத்தை இயக்கி வருகிறார் ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கர்விக். ரையன் காஸ்லிங் மற்றும் மார்கரெட் ராபீ ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மிக வண்ணமயமான ஒரு படமாக எடுக்க விரும்பியிருக்கிறார். பார்பியின் உலகத்தை கண்முன் உருவாக்குவதற்காக இயக்குநரும்  ப்ரோடக்‌ஷன் டிசைனர் சாரா ஆகிய இருவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தில் வரும் வீடுகள் அனைத்தும் பார்பி பொம்மைகளின் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டு அவற்றுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், கார்கள், சாலைகளுக்கு எல்லாம் பிங்க்  நிற பெயிண்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தற்போது சர்வதேச சந்தையில்  பிங்  நிறப் பெயிண்ட் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு இந்தப் படத்தில் பெயிண்ட் பயன்படுத்தியுள்ளார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராஸ்கோ என்ற நிறுவனத்திடம் படத்திற்குத் தேவையான மொத்த பெயிண்டையும் வாங்கியுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம். இது குறித்து விளக்கமளித்த ராஸ்கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன் “ பிங் நிற பெயிண்ட தட்டுப்பாடில் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கு முழுக்காரணம் பார்பி படம் அல்ல. ஏற்கனவே கொரோனா மற்றும் சில காரணங்களால் எங்கள் பெயிண்ட் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.

எங்களிடம் மிக குறைவாகவே பெயிண்ட் இருப்பு இருந்தது. இந்த சமயத்தில் தான் பார்பி படத்திற்குத் தேவையான மொத்த பெயிண்டையும் எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது படத்தின் நிர்வாகம். இதன் காரணத்தால் தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது”  என அவர் தெரிவித்தார்.

ஹாலிவுட்டில் பெண்களின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்யும் இயக்குநர்களில் முக்கியமானவர் க்ரெட்டா கெர்விக். இவர் இயக்கிய பிரான்சிஸ் ஹா இன்றுவரை ஆண் பெண் இருதரப்பினராலும் சிலாகிக்கப் படும் திரைப்படம். மேலும்  லுயி மே ஆல்காட் எழுதிய லிட்டில் வுமன் என்கிற நாவலை தனது பார்வையில் புதிய கண்ணோட்டத்தில் இயக்கியிருப்பார் க்ரெட்டா. கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கினார் க்ரெட்டா.

ஒரு உறவு முறிவதை மிக அழகாக சித்தரித்திருப்பார். தற்போது பெண்களுக்கான கார்டூன்கள் என வரையறுக்கப்படும் பார்பீ  குறித்தான கதையை எடுக்கும் க்ரெட்டா அதில் என்ன புதிதாக சொல்லப்போகிறானர் எனபதை பார்க்க மிக ஆர்வமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget