War 2 Teaser: இனி தெரிஞ்சுக்குவ.. ஹ்ரித்திக் ரோஷனையே பறக்க விடும் ஜுனியர் என்டிஆர்! ரிலீசானது வார் 2 டீசர்!
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் - ஜுனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான யஷ் ராஜின் ஸ்பை சீரிஸ் வரிசை படங்களில் மிகவும் முக்கியமான படம் வார். ஹ்ரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்த இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு ரிலீசானது.
ரிலீசான வார் 2 டீசர்:
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஜுனியர் என்.டி.ஆரின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு வார் 2ம் பாகத்தின் டீசர் இன்று ரிலீசானது.
முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜுனியர் என்.டி.ஆர். மோதிக்கொள்வது போல காட்டப்படுகிறது. இதனால், ஜுனியர் என்.டி.ஆர். இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அல்லது படத்தில் ஏதேனும் ட்விஸ்ட் அமைந்துள்ளதா? என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 14 ரிலீஸ்:
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் ஜுனியர் என்.டி.ஆரின் புகழ் பிரபலம் அடைந்தது. இதையடுத்து, அவரை வார் 2ம் பாகத்தில் ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ள நிலையில், உலகெங்கும் இந்த படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர்., ஜான் ஆப்ரகாம், ஷபீர் அலுவாலா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யஷ்ராஜ் ஸ்பை யுனிவர்ஸ் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திற்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார்.
ஸ்பை யுனிவர்ஸ்:
தமிழில் எல்சியு எனப்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸ் போல, பாலிவுட்டில் இந்த யஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் உருவாகி வருகிறது. சல்மானின் கானின் ஏக்தா டைகர், அதன் தொடர்ச்சியாக டைகர் ஜிந்தா ஹாய் வெளியாகிய நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷனின் வார் வெளியானது. சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷனை தங்கள் ஸ்பை யுனிவர்ஸில் கொண்டு வந்த யஷ்ராஜ் பிலிம்ஸ் அடுத்து ஷாருக்கானையும் கொண்டு வந்தனர்.
அவரது பதான் படம் கடந்த 2023ம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் சல்மான்கான் நடித்திருப்பார். பின்னர், டைகர் 3 படம் கடந்த 2023ம் ஆண்டு ரிலீசானது. இதில் சல்மான்கானுடன் இணைந்து ஷாருக்கான் நடித்திருப்பார்.
வில்லனா ஜுனியர் என்.டி.ஆர்.?
இந்த யஷ்ராஜ் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஜான் ஆப்ரகாம், டைகர் ஷெராஃப் ஆகிய பிரபல ஹீரோக்களே வில்லனாக இதுவரை நடித்துள்ளனர். இவர்களை போலவே ஜுனியர் என்.டி.ஆரும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





















