பில்லா பட இயக்குனருக்கு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது!
Shershaah: விஷ்ணு வரதனின் திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு என அனைத்துமே ப்ளசாக இருந்தது தான் ஷெர்ஷா படத்தின் வெற்றிக்கு காரணம்.
Vishnu Varadhan Filmfare Award 2022 : முதல் பாலிவூட் படத்திற்கு ஃபிலிம்பேர் விருது பெற்ற தமிழ் இயக்குனர் விஷ்ணு வரதன்
நடிகர் அஜித் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களான பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணு வரதன். மீண்டும் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது ஆனால் அது குறித்த எந்த ஒரு தகவலும் இது வரையில் வெளியாகவில்லை.
குருவின் பேர் சொல்லும் சிஷ்யன்:
தமிழில் பல அதிரடி, திரில்லர் படங்களை இயற்றியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தை இயற்றியவர் விஷ்ணு வரதன். இப்படம் மூலம் தான் ஆர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் ஆரம்பகாலத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட தலைசிறந்த இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது:
பாலிவுட்டில் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான 'ஷெர்ஷா' திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் இயக்குனர் விஷ்ணு வரதன். பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போரில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது 'ஷெர்ஷா' திரைப்படம். கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் சித்திதார்த் மல்ஹோத்ரா. படத்தின் கதாநாயகியாக சிறப்பாக நடித்திருந்தார் கியாரா அத்வானி. விஷ்ணு வரதனின் திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு என அனைத்துமே ப்ளசாக இருந்தது தான் இப்படத்தின் வெற்றி. விஷ்ணு வரதன் இயக்கிய முதல் ஹிந்தி திரைப்படமே பயோ பிக் படமாக எடுத்து அதை சாதனையாகவும் மாற்றி காட்டியுள்ளார் விஷ்ணு வரதன். அவரின் இந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் தனது நன்றியை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.
Thank u #FilmfareAwards2022 #filmfare. https://t.co/0pvvl2q6HE
— vishnu varadhan (@vishnu_dir) September 1, 2022
அஜித் - விஷ்ணு வரதன் நட்பு :
நடிகர் அஜித் - இயக்குனர் விஷ்ணு வரதன் நட்பு மிகவும் நெருக்கமானது. இந்த படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் அஜித் இயக்குனர் விஷ்ணு வரதனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
#Shershaah bags Major Awards in different categories..Best film, Best Director - #VishnuVardhan. Best Music Album, Best Action - #Stefan & #Sunil , Best editing - #SreekarPrasad#FilmfareAwards2022 pic.twitter.com/7hZEze5yfA
— Thyview (@Thyview) September 1, 2022