Viruman: ‛யார்ரா இது.. தீயா நிக்கான்...’ 2வது நாளே வெற்றியை கொண்டாடிய விருமன் டீம்!
விருமன் படம் நேற்று வெளியானதை அடுத்து, படத்தின் வெற்றியை விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினர் இன்று கொண்டாடினர்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ‘விருமன்’திரைப்படம் நேற்று வெளியானது. இந்த நிலையில் தற்போது 'விருமன்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் 'விருமன்' திரைப்படம் 8.2 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 5.12 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார்.
முன்னதாக,தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் ஒரு சார்பு இருக்கும் என விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அது தொலைக்காட்சி வெளியீடாக ரிலீஸ் ஆனது. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்.
#Viruman திரைப்பட வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழக விநியோக உரிமையை பெற்றுள்ள நமது நிறுவனமான @SakthiFilmFctry சார்பாக @Karthi_Offl sir, @rajsekarpandian அண்ணன், @dir_muthaiya ஆகியோருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை கொண்டாடினோம்😍#Blockbuster_Viruman @2D_ENTPVTLTD @Suriya_offl pic.twitter.com/mrWzwoTfpC
— Sakthivelan B (@sakthivelan_b) August 13, 2022
View this post on Instagram
விருமன் வெளியாகி, தமிழ்நாடு முழுக்க தியேட்டர்களை நிரப்பி வருகிறது. இந்நிலையில் இன்று படத்தின் படத்தின் ஹீரோ கார்த்திக், இயக்குனர் முத்தையா, 2D என்டர்டெயின்மென்ட் மேலாளர் ராஜசேகர் ஆகியோருக்கு விநியோகஸ்தர் சக்திவேலன் மாலை அணிவித்து படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடினர். இரண்டாவது நாளே, வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது விருமன் டீம்!