Viruman Release Prepone: முன்னதாகவே வீரநடை போட்டு வருகிறாரா விருமன்? இதுதான் சுவாரஸ்ய அப்டேட்..
விருமன் படம், முன்னதாகவே ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.விருமன் படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் #விருமன் 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 18, 2022
A @SakthiFilmFctry Release 🤝#VirumanFromAug31@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial @sakthivelan_b pic.twitter.com/7hGu2F2kvl
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக வேறு எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார் கார்த்தி. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில், விருமன் திரைப்படத்திற்காக கார்த்தி களமிறங்கினார். தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது. முன்னதாக, விருமன் திரைப்படத்தில் இருந்து 'கஞ்சா பூ' பாடல் ப்ரோமோ சாங் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்பாடல் தற்போது வரை 25 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
#Cobra- August 31
— Kaushik Rajaraman (@iamkaushikr) July 21, 2022
#Viruman likely on August 11. Talks are on. Not confirmed yet. #ChiyaanVikram #Karthi #LaalSinghChaddha #AamirKhan
முன்னதாக 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. தற்போது, இப்படம் முன்னதாகவே ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. கோப்ரா படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில், விருமன் படக்குழுவினர் படத்தை முன்னதாகவே வெளியிட திட்டமிட்டு இருக்கலாம் என ட்விட்டர் பக்கத்தில் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். விருமன் படம் முன்னதாகவே ரிலீஸ் ஆவதை பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.