மேலும் அறிய

விருதுநகர் மாவட்ட கலை விருதுகள்: 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சம் பரிசு!

பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்  என மொத்தம்  15 கலைஞர்களுக்கு  ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம் 15 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகள் மற்றும்  ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

 
கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வு

விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட கலை விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும்,  மாவட்ட கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறந்த ஓவிய, சிற்ப படைப்பாளிகளுக்கு  சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது....," கலை மற்றும் பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து, இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 
கலை விருதுகளில் கலை இளமணி விருது

இளம் தலைமுறையினர்கள் விளையாட்டு, கலை, ஓவியம், சிற்பம் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் போது அவர்களின் தனித்திறமைகள் வளர்வதோடு நமது சமுதாயத்தை நல்ல நோக்கத் தோடு கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் இதனை கடத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருது பெற்ற பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்) ஆகியோர்களுக்கு தலா ரூ.4000- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை வளர்மணி விருது பெற்ற திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்),  பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்) ரூ.6000- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்,

கலை சுடர்மணி விருது பெற்ற வே.சுடலைக்கனி(தவில்), கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்) ரூ.10,000- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை நன்மணி விருது பெற்ற அ.கந்தவேல்(நாதஸ்வரம்), ப.மாரிராஜ்(வாய்பாட்டு), பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்) ரூ.15,000- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), பே.காளியப்பன்(நாடகம்) ரூ.20,000- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்  என மொத்தம்  15 கலைஞர்களுக்கு  ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், ஓவிய, சிற்பக் கண்காட்சியில் வெற்றி பெற்ற 21 நபர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர்(திருநெல்வேலி) திரு.து.சிவப்புகழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜ பூபதி, அரசு அலுவலர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget