Vimal Audio : “காம்பவுண்ட் போட்டா ஏறிகுதிச்சு ஓடுவேன்..” அடுக்கடுக்காக வந்த புகார்கள்.. ஆடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த விமல்..!
Vimal-Singaravelan Issue: நடிகர் விமலுக்கு எதிராக தொடர்ச்சியாக மோசடி புகார்கள் எழுந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் விமலுக்கு எதிராக தொடர்ச்சியாக மோசடி புகார்கள் வந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஆடியோவில், “சிங்கார வேலவன் அண்ணனுக்கும், கோபி அண்ணனுக்கு என்னுடைய வணக்கம். என்னை மெருகேற்றி மேன்மைப்படுத்திய உங்களுக்கு என்னுடைய நன்றி. நான் அவமானங்கள், மன உளைச்சல்கள், தலைகுனிவு என என்னை இப்படி செய்கிறார்களே என்று மனம் வெம்பி கிடந்தேன். ஆனா திடீரென்று எனக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜி வந்தது போல இருக்கிறது. நாம் ஏன் இந்த பிரச்னைகளை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஓடக்கூடாது என்ற பாசிட்டிவ் எனர்ஜியை எனக்குள் ஏற்றியிருக்கிறீர்கள்.
இந்த வருடத்திற்குள் உங்கள் கடன் எல்லாவற்றையும் அடைத்து விட்டு, நானும் நிம்மதியாக இருப்பேன். உங்களையும் நிம்மதியாக வைத்திருப்பேன். எல்லாரும் சேர்ந்து ஜெயிப்போம் அந்த மனநிலையோடு நான் ஓடுகிறேன். வேலி போட்டா ஓடுவேன். காம்பவுண்ட் போட்டா ஏறிகுதிச்சு ஓடுவேன். என்னை ஓட வைத்த உங்களுக்கு என்னுடைய நன்றி. இதே போல என்னை நீங்கள் பாராட்டுகிற காலம் வரும் நன்றி நன்றி” என்று அவர் அதில் பேசியிருக்கிறார்.
முன்னதாக, மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது கோபி என்பவரிடம் விமல் 5 கோடி வாங்கியதாகவும், படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறிய விமல் பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்தது. அதனைத்தொடர்ந்து விநியோகஸ்தர் சிங்கார வேலவன் என்பவரும் விமல் தன்னிடம் வாங்கிய 1.5 கோடியை திருப்பி தராமல் மோசடி செய்வதாக புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து விநியோகஸ்தர் கங்காதரனும், திருப்பூர் ஸ்ரீ கணேசனின் மகளான ஹேமாவும் விமல் மீது மோசடி புகார்களை எழுப்பியிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

