Village Cooking Channel: முதல் ஆளா நான்தான் இருக்கணும் - சொல்லி அடித்த லோகேஷ்.. நெகிழ்ச்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல்..!
விக்ரம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தமைக்காக நன்றி தெரிவித்து வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
விக்ரம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தமைக்காக நன்றி தெரிவித்து வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில், “ இன்று விக்ரம் படத்தை திரையரங்கில் பார்த்தோம். படம் மிக மாஸாக வந்துள்ளது. இதுவரைக்கும் எங்களது வீடியோவிற்கான வரவேற்பை உங்களது கமெண்ட் மூலமாக தெரிந்து கொண்டு இருந்தோம். ஆனால் இன்று விக்ரம் படத்தின் மூலம் முதல்முறையாக நேரடியாக எங்களது நடிப்பிற்கான வரவேற்பை பார்த்தோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜ்ஜூக்கு நன்றி. கமல் சார் படம் என்றாலே கால காலத்துக்கும் நின்று பேசும். இந்த விக்ரம் படமும் அப்படித்தான் இருக்கிறது. அப்பேற்பட்ட படைப்பில் எங்களையும் சிறிய துளியாய் இணைத்துக்கொண்ட கமல் சாருக்கு மிகவும் நன்றி
லோகேஷ் கனகராஜ் சொல்லும் போது, இனி உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். ஆனால் முதன்முறையாக உங்களை திரையில் அறிமுகப்படுத்தியது நானாகத்தான் இருக்க வேண்டும் என்றார். அதே போல விஜய்சேதுபதி வாழ்கையில் உயரம் செல்ல செல்ல வரும் பிரச்சினைகள் குறித்தும் அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் பல ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். அவருக்கு எங்களுடைய நன்றிகள். லோகேஷ் கனகராஜ் மேலும் மேலும் வளரவேண்டும்” என்று கூறியுள்ளனர்.
First Time in Our Life! Thank you, @Dir_Lokesh Anna, @ikamalhaasan sir, @VijaySethuOffl Anna, @RKFI, and our lovable subscribers! pic.twitter.com/JAQTmswdFD
— Village Cooking Channel (@Team_VCC) June 5, 2022
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது.மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
I haven’t been this emotional ever.The acceptance u’ve showed #Vikram and me has been so overwhelming.I don’t know how i’m gonna repay you guys for all this love.Ever grateful to @ikamalhaasan sir and my amazing people. So moved. Love you all 🙏🏻🙏🏻🙏🏻
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 5, 2022
இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் எப்போதும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரமுக்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்திருக்கிறது. நீங்கள் தந்த அன்பிற்கு கைமாறாக நான் என்ன திருப்பித்தரபோகிறேன் என்று தெரியவில்லை. இதை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த கமல்ஹாசன் சாருக்கும், என்னுடைய மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். நான் நெகிழ்ந்து விட்டேன். லவ் யூ ஆல்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.