Vikram Vedha: ‘விமர்சனங்களைப் பார்த்தால் குழப்பமாக உள்ளது..’ பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன்!
Vikram Vedha: கடந்த 30ஆம் தேதி ஹிந்தியில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தின் விமர்சனங்கள் தனக்கு மிகவும் குழப்பமாக உள்ளதாக ஹிரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.
![Vikram Vedha: ‘விமர்சனங்களைப் பார்த்தால் குழப்பமாக உள்ளது..’ பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன்! Vikram Vedha: Hrithik Roshan says that he is confused by the reactions that he has been receiving for his film vikram vedha Vikram Vedha: ‘விமர்சனங்களைப் பார்த்தால் குழப்பமாக உள்ளது..’ பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/04/6c2a0f8970395ca28fe45be148ca2cd61664887088702501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் திரையுலகில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வகையான விமர்சனங்களைப் பார்த்தால் தனக்கு மிகவும் குழப்பமாக உள்ளதாக அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஹிரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.
கோலிவுட் விக்ரம்-வேதா:
தமிழில், இயக்குனர் சாம் சி எஸ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் விக்ரம் வேதா. 20’ஸ் காலகட்டங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வந்து, பின்னர் ‘ரக்கட் பாயாக’ உருவெடுத்த நடிகர் மாதவன், இப்படத்தில் விக்ரம் என்ற வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு இனையான வில்லன் கதாப்பாத்திரத்தில் வேதா என்ற ‘நெகட்டிவ்’ ரோலில் நடித்தார் விஜய் சேதுபதி. வழக்கமான போலீஸ்-தாதா கதையாக இருந்தாலும், அதில் கொஞ்சம் நஞ்சையும் வன்மத்தையும் தூவி த்ரில்லர் வடிவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் மக்களிடமிருந்து பலத்த ஆதரவைப் பெற்றது விக்ரம் வேதா. கற்பனைக் கதையில் விக்ரமாதித்தனின் தோள் மீது ஏறிக்கொண்டு வேதாளம் கேட்பது போல, “ஒரு கத சொல்லட்டுமா சார்…?” என மாதவனிடம் விஜய் சேதுபதி கேட்பது மீஸ்களிலும், வீடியோ வடிவிலும் வைரலானது.
படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகியும், இன்றும் அப்படத்தின் ‘இம்பேக்ட்’ மக்களிடம் குறையவில்லை. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில், யார் யாரை சுட்டது? இறுதியில் உயிரிழந்தது யார்? என்பது போன்ற கேள்விகளையும் மக்களிடமே விட்டுவைத்தது படத்தின் பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதன் இரண்டாம பாகமும் தயாராகும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஹிரித்திக் ரோஷன் வில்லனாக நடிக்க…
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வது சமீப காலத்தில் வழக்கமாக மாறியுள்ளது. காஞ்சனா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வசைபாட்டை வாங்கியது. இருந்தும், நல்ல கதைகளை கொண்ட படங்களை ரீ-மேக் செய்ய வேண்டும் என முடிவெடுத்த பாலிவுட், விக்ரம் வேதா படத்தையும் விட்டுவைக்கவில்லை. இப்படத்தில், சயிஃப் அலி கான் ஹீரோவாகவும், ஹிரித்திக் ரோஷன் வில்லனாகவும் நடித்திருந்தனர். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே, ‘பாய்காட் பாலிவுட்’ என்ற ஹேஷ்டேக்கில் விக்ரம் வேதா படமும் சிக்கிக்கொண்டது. கடந்த 30ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களின் ஆதரவை பெறுமா பெறாதா என கேள்வி எழுந்தது. இருந்தாலும், கதைவசனமும், சயிஃப்-ஹிரித்திக் ரோஷனின் 'ஸ்கிரீன் ப்ரஸன்ஸ்' அனைவருக்கும் பிடித்துப் போக, படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கலவையான விமர்சனங்கள்:
பாலிவுட்டில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம், கதையை கொஞ்சமும் பிழற்றாது, அப்படியே தமிழ் விக்ரம் வேதாவின் நகலாக உள்ளதாக சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவ்வாறாக ரசிகர்கள் தெரிவித்து வரும் கலவை விமர்சனங்கள் குறித்து ஹிரித்திக் ரோஷன் ஒரு கருத்தை கூறியுள்ளார்.
“குழப்பமாக உள்ளது..”
விமர்சனங்கள் குறித்து நடிகர் ஹிரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளதாவது, “விக்ரம் வேதா படத்திற்கு வந்திருக்கும் கலவை விமர்சனங்கள் மிகவும் குழப்பத்தைத் தருகிறது” என கூறியுள்ளார். மேலும், பல வகையான விமர்சனங்கள் இருப்பினும், விக்ரம் வேதா படத்தில் நடித்தது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாகவும், தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)