Vikram : வில்லன் விஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலா, இவர்தான் நடிச்சிருப்பாரு.. விக்ரம் சீக்ரெட்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இரண்டு முன்னணி நடிகர்களில் ஒருவரை ஒப்பந்தம் செய்வதாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் உலகெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் விக்ரம்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இரண்டு முன்னணி நடிகர்களில் ஒருவரை ஒப்பந்தம் செய்வதாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் உலகெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி, டினா என பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
படத்தின் வெற்றிக் கொண்டாட்டக் கதைகள் ஒருபக்கம் களை கட்டிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் வெளிநாடுகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவிலே படம் வசூல் செய்துள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதே உற்சாகத்தில் கமல்ஹாசன் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காரும் பரிசளித்துள்ளார். இந்த விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வில்லன் ரோலுக்கு நடிகர் பிரபுதேவா அல்லது நடிகர் லாரன்ஸை ஒப்பந்தம் செய்வதாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடைசி வேளையில் தான் அந்த முடிவு கைவிடப்பட்டு விஜய்சேதுபதியை வில்லனாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாவ கதைகள் அந்தாலஜியில், விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த "லவ் பண்ணா உட்றனும்" பகுதியில், நரிக்குட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து, பலரையும் மிரள வைத்த ஜாபர் சாதிக், விக்ரம் படத்திலும், சிறப்பான காதாபாத்திரம் ஒன்றை செய்துள்ளார். அவரது நடிப்பிற்கும், பல தரப்பிலான மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ஜாஃபர் சாதிக் கூறுகையில், விஜய்சேதுபதிக்குப் பதிலாக நடிகர் பிரபுதேவா அல்லது நடிகர் ராகவா லாரன்ஸையே ஒப்பந்தமாக செய்வதாக இருந்தது. ஆனால் கடையில் விஜய்சேதுபதியை இறுதி செய்தனர் என்றார். ஜாஃபர் சாதிக் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் வலது கையாக வலம் வருவார்.
அவர் கூறிய இந்தத் தகவல் குறித்து ரசிகர்கள் இப்போது விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் விக்ரம் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் கனக்கச்சிதமாக பொருந்தியிருந்தது.
ரஜினி பாராட்டு:
விக்ரம் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். படம் முடிந்ததும் உடனடியாக நடிகர் கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு படம் சூப்பர்..சூப்பர்..என தனக்கே உரித்தான ஸ்டைலில் பாராட்டியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கும் போன் செய்து ரஜினி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். எனினும் பான் இந்தியா படமாக வெளியான விக்ரம் இந்தி வட்டாரத்தில் எதிர்பார்த்த அளவு வசூலைக் குவிக்கவில்லை என தமிழ் சினிமா வட்டாரத்தினர் கவலைத் தெரிவித்துள்ளனர்.
விக்ரம் 3ஆம் பாகமும் எடுக்கப்படும் எனக் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இருந்து கதை ஆரம்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.