Vikram Movie Box Office Collection: த ஈகிள் இஸ் கம்மிங்…உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் விக்ரம்!
Vikram Movie Box Office Collection: லோகேஷ் கங்கராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த திரைப்படமான விக்ரம், உலகளவில் 432கோடிகள் வசூலித்து,உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக திகழ்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயகத்தில், கமல்ஹாசன் தயரித்து நடித்த படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரைகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி, யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து ஆக்ஷன் காட்சிகளில் தோன்றியது பெரும் வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
கிளைமேக்ஸில் 5 நிமிடங்கள் மட்டுமே வரும் நடிகர் சூர்யா, ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு இவரை விட யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அல்டிமேட்டாக நடித்து அப்லாஸ் வாங்கினார்.
View this post on Instagram
இப்படம் ஜூன் மாத தொடக்கத்தில் அதிவேக ரயிலாகத் தொடங்கி, அடுத்த சில வாரங்களில் கோலிவுட் வரலாற்றின் ஒவ்வொரு சாதனையையும் முறியடித்தது. பல்வேறு பதிவுகளில், மிக முக்கியமான ஒன்று பாகுபலி 2-யை தோற்கடித்து தமிழ்நாட்டின் மிக அதிக வசூல் செய்த சாதனையைச் செய்தது.
#Vikram Boxoffice Collection : #KamalHaasan
— Sony Pictures Tamil (@SonyPicture_) August 17, 2022
🔳 Budget - ₹150 Crore
🔳 TN - ₹178+ Crore
🔳 WW - ₹442+ Crore
🔳 Verdict - Biggest Blockbuster Movie of the Year!. pic.twitter.com/88fazbcL0N
மேலும் இப்படம் உலகளவில் ரூ 373 கோடிகள் வசூளித்து, 2.0 படத்தின் ரூ.288 கோடிகள் சாதனையை முரியடித்தது உடைந்தது. இந்நிலையில் விக்ரம் படம் எதிர்பார்த்ததை விட அதிகளவிலே வசூல் செய்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.